சாவதற்கு நேரமில்லை


சாவதற்கு நேரமில்லை
ஆண்டவர் சொன்னதை செய்யாவிடில்..?
(மிக நீ.....ளமான பதிவு இது.!)

please click here to read the English edition of this post:
http://clarion.charismaeministry.com/?p=935


http://askgramps.org/files/2014/09/Jonah.jpg
இனிய வலை அன்பர்களே ...!
அநேக பதிவுகள், நாம் சொன்னது போல தொடர முடியாமல் அந்தரத்திலே இருக்க, போன பதிவிலும் தொடர வேண்டிய குறிப்பு இருந்தும் அதை சொல்லாமல் தவிர்த்தேன். கிறிஸ்தவத்தின் முதல் மிஷினரி (Missionary) பவுலின் நிச்சயமான வார்த்தையை நாம் சென்ற பதிவில் பார்த்தோம். எனக்கு சொல்லப்பட்டபடியே சம்பவிக்கும், என்று அறுதியோடு உறுதியிட்டு சூழ்நிலை சாத்தியமில்லா நிலையில் சொன்னார் அந்த மாமனிதர். ஆண்டவர் சொன்னதை செய்திடுவார் என்பதே நம் அனைவரின் எண்ணமும் கூட, அது தானே வேதமும் உரைக்கிறது ?
ஆனால் அதே வேதத்தில் ஆண்டவர் சொன்னதை செய்யாமல் போன வரலாறும் நடந்துள்ளது, தெரியுமா? என்ன குழப்புகிறோமோ? இல்லவே இல்லை! போன பதிவில் எனக்கு சொல்லப்பட்டபடியே நடக்கும் என்று செய்தியளித்த நாம் தான் இப்பொழுது ஒருவேளை எனக்கு சொல்லப்பட்டபடியே நடவாவிட்டால் என்றும் பதிவிடுகிறோம். தெளிவாய் வேதம் சொல்வதை எடுத்துரைக்கிறோம்.
ஜெபத்தோடு, தேவன் தந்த வெளிச்சத்தையே இங்கு பகிர்ந்திட விழைகிறோம். . தயவு செய்து தேவன் பொய்யர் என்றோ வார்த்தை தவறுபவர் என்றோ நாங்கள் சொல்வதாக நினைத்திட வேண்டாம். ஆனால் சொன்னதை செய்ய விரும்பாமல் போன வரலாற்றையே நாம் இங்கே பார்த்திடவிருக்கிறோம். தேவன் நமக்கு சொன்னதை செய்யாமல் போனால் அதற்கான காரணங்களில் ஒன்றை தான் நாம் சொல்லவிருக்கிறோம்.
இனி தீர்க்கதரிசி யோனாவை பற்றி...  யோனாவை அறியாதவர் உண்டா?
அத்தியாயம் 1:
தேவை
! ஒடிப்போன அதே யோனா!
தீர்க்கதரிசியின் பணியினை சுருக்கமாக சொல்வது கூட கடினம். சொந்த வார்த்தையல்ல தேவன் சொல்வதை அப்படியே அவர் மக்களுக்கு சொல்பவன் தான் தீர்க்கதரிசி. அதற்கு மணிக்கணக்கில் நாட்கணக்கில் அவன் மக்களிடம் இருந்து பிரிந்து தனித்திருந்து தேவனிடம் ஜெபத்தில் காத்திருக்க வேண்டும். பொதுவாக தீர்க்கதரிசியின் வாழ்வு பஞ்சு மெத்தையாக இருப்பதில்லை. தேவன் தீர்க்கதரிசியின் வாழ்வை மற்றவர்களுக்காக உவமையாக மாற்றுவார். அதற்கு பாடுகள், துயரங்கள் வலியும் வேதனையும் தான் அவனுடைய அன்றாட வாழ்க்கையாக மாற்றுவார். மற்ற ஜனத்தை போல அவன் உலக வாழ்க்கையை அனுபவித்திட இயலாது. உறவுகளை பிரிந்து, எல்லா ஆடம்பரங்களை துறந்து எதெல்லாம் ஆண்டவர் இழக்க செய்கிறாரோ அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும். அவனுக்கென்று குடும்பம் வம்சம் இருந்தாலும் அவன் ஒரு முழுநேர தேவனுடைய பணியாளன். எல்லா மக்களுக்கும் அவன் ஒரு முன்னுதாரணம். இப்படிப்பட்டவர்களைத் தான் தேவ மக்களை வழி நடத்த தேவன் தெரிந்து கொண்டார். யோனாவும் அப்படிப்பட்ட தீர்க்கத்தரிசி தான்.
சிரியா நாட்டின் தலை நகரம் நினிவே நினிவே கிட்டத்தட்ட 2750-2800 ஆண்டுகளுக்கு முன் மகா செழிப்பு மிக்க நகரமாயிருந்தது.. நினிவே பட்டினத்தின் பாவம் தேவனை எட்டின போது... அந்த பிரம்மாண்ட பட்டினத்தை அழிக்க தேவன் சித்தமானார். அதை அறிவிக்க தீர்க்கத்தரிசி  யோனாவை அனுப்பினார். ஏனோ அந்த பணியை செய்ய யோனா விரும்பாமல் கப்பலில் தர்ஷீஸ்க்கு ஓடிப்போக, அதை தடுக்க பெருங்காற்றை அனுப்பி கடலில் அவனை வீசியெறிய நிர்பந்தம் பண்ணினார் ஆண்டவர். கடலில் அவன் மூழ்கி செத்து போகாமல் அவனை ஒரு பெரிய திமிங்கலம் விழுங்கிட வகை செய்தார். மீனும் அவனை தின்று விடாமல் 3 நாள் வரை பாதுகாத்து அவனை கரை சேர்த்தது. யோனாவை கொண்டு தான் தன் திட்டத்தை நிறைவேற்ற தேவன் முடிவெடுத்து விட்டால் அதை யார்தான் தடுத்து நிறுத்த முடியும்?
ஆண்டவர் சித்தம் செய்வது யோனா போல அவ்வளவு கஷ்டமாகிவிட்டதா உங்களுக்கு? உங்கள் இஷ்டப்படி தர்ஷிசிற்கு ஒடிப்போகவா ஆண்டவர் கடந்த காலம் உங்களை பயிற்சிவித்தார்? ஆண்டவர் சித்தத்தை மீறி நீங்கள் எங்கே ஒடிப்போனாலும் ஆண்டவர் உங்களை விடவே மாட்டார். புயல் வீசும் போது தான் யோனாப்போல மனம் மாறுவேன் என்று சொல்வீர்களானால் புயலை அனுப்பவும் ஆண்டவர் தயங்கமாட்டார். ஒடிப்போனவர்கள் செய்த தவற்றை ஒப்புக்கொள்வதை தவிர வேறு மார்க்கமில்லை. மட்டாய் தண்டித்து தம்மிடம் சேர்த்து கொள்ளும் தேவன் அவர்.
முதல் சந்தர்ப்பத்தில் கீழ்படியாமல் போன யோனாவிற்கு மீண்டும் இரண்டாவது வாய்ப்பினை தேவன் தருகிறார். யோனா நினிவே போனான். பாவத்திலும் அக்கிரமத்திலும் திளைத்து போன அந்த மக்களை பார்த்து யோனா, தேவன் சொன்னபடியே சொல்கிறான், நினிவே பட்டிணம் 40 நாட்களில் அழிக்கப்படும் என்று தீர்க்கத்தரிசனம் உரைக்கிறான். நினிவே மானகரத்தில் ஆண்டவர் சொன்ன கடமையை நிறைவெற்றியது எல்லாம் சரிதான்.... ஆனால் இஸ்ரவேலர் மாத்திரமே தேவனுடைய பிள்ளைகள் என்று அவன் எல்லாரை போல நினைத்ததினால் என்னவோ, வந்த வேலை முடிந்தவுடன் அங்கிருந்து கிளம்பாமல் நகரத்திற்கு வெளியிலேயே தங்கி அந்த நகரத்தை தேவன் எப்படி அழிக்க போகிறார் என்று உற்று நோக்கினான். தான் சொன்ன தீர்க்கத்தரிசனம் நிறைவேற காத்திருக்கிறான். எல்லோரை போலவே தேவன் தாம் சொன்னபடியே செய்திடுவார் என்று நம்புகிறான்... இஸ்ரவேலரின் எதிரியாக தான் அவன் நினிவே மக்களைப் பார்க்கிறான். நகரம் எப்படி அழிய காத்திருக்கிறான்... ஆனால் ஆனால் தேவன் தாம் சொன்னபடியே அந்த பட்டினத்தினை அழிக்கவில்லை. ஏன்? தேவன் சொன்னதை ஏன் செய்யவில்லை?
நடந்தது என்ன?
அத்தியாயம் 2:
தேவை, மனந்திருந்தும் மாந்தர்கள்!
நினிவே மக்கள் ஆண்டவரின் எச்சரிக்கை தீர்க்கத்தரிசனத்தை கண்டு செய்வதறியாது கலங்கினர். நோவாவின் காலத்து மக்களை போல யோனாவை கேலி செய்யவில்லை. மாறாக யோனாவின் வார்த்தையை முழுவதும் நம்பினார்கள். உண்மையான இறைவனை தேடி மனம்திரும்பினார்கள். சிறியோர் முதல் பெரியோர் வரை, இராஜாவும் இணைந்து, உட்பட தண்ணீர் அருந்தாமலும், உணவை சாப்பிடாமலும், சாக்கு ஆடை அணிந்து தேவனுடைய இரக்கத்திற்காக கெஞ்சினார்கள்.
அவர்களின் அந்த அறிக்கையை தான் பாருங்களேன்...
யாருக்குத்தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான்.”யோனா 3:9
தேவன் அந்த ஜனம் தங்களை அந்தளவுக்கு தாழ்த்தி தன்னிடம் இரக்கதிற்காக கெஞ்சினதை கண்டு மனஸ்தாபப்பட்டு, அவர்களுக்கு செய்வேன் என்று சொன்ன தீங்கை செய்யாமலிருந்தார்.
யெகோவா தேவனை அறிந்தும் அறியாத மக்கள் உலகமெங்கிலும் சிதருண்டு போயிருந்தனர். யோனா காலம் முன்பு வரை தேவனை அறியாத மக்களுக்கு தேவனை பற்றி எவரும் சென்று அறிவித்ததில்லை. யோசேப்பு எகிப்திலும், தானியேல் பாபிலோனிலும் தேவனுக்கு சாட்சியாயிருந்தனர். இதனால் இராஜாக்களும் தேவனை அறிந்துகொண்டனர். எகிப்திய வேலைக்காரி ஆகார், அசீரிய தளபதி நாகமான் புறஜாதி மக்களும் தேவனை தேடி அருள் பெற்றவர்கள் தானே.
இந்த அண்டசராசங்களையும் படைத்த தேவன் மனிதனை உருவாகிட்ட போது அவனுக்கென்றே உன்னதமான திட்டங்களை வைத்திருந்தார். முதல் மனிதன் ஆதாமும் ஏவாளும் அதனை தங்களுடைய சொல் கேளாமையினாலே உன்னத வாழ்வினை இழந்தனர். தங்கள் மீது விழுந்த சாபத்தோடு தேவ மகிமையில்லாமல் பூலோக வாழ்கையில் தள்ளப்பட்டனர். அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும் பெற்றெடுத்து தேவன் தரப்போகும் மேசியாவினால் வரும் மீட்புக்காக காத்திருந்தனர். மனித சுபாவத்தினில் சொல் கேளாமை (கீழ்ப்படியாமை) பகைமையாக உருவெடுத்தது. பகைமை கொலைப்பாதகமாக பொய்யாக மருரூபமானது. தொடர்ந்து காமம் விகாரமாகி அத்துமீறலாகியது. வேசித்தனமும், விபச்சாரமும் அக்கா தங்கையாக பிறந்தனர். களவு, பொறாமை வஞ்சனை குற்றங்களுக்கு கரையில்லாமலே போனது. பாவம் வெளிய அல்ல உள்ளேயிருந்து புறப்படும் ஒன்று தான் என்பது தேவன் நமக்கு உணர்த்த விரும்பும் உண்மை. எல்லா பாவங்களுக்கும் மேலான பாவமாக படைத்த உயிரான தேவனையே மறந்து, மறுதலித்து உயிரற்ற ஜடமான கல்லிலும் மண்ணிலும் பலத்தரப்பட்ட உருவங்கள் செய்து அதையே தன்னை சார்ந்தவர்களை தெய்வமாக வணங்கிட முறைமை படுத்தினான். இதுவே தேவன் அருவருக்க தக்க விக்கிரதாரதனை மகா பாவம். அறியாமல் உள்ள அந்த காலங்களில் தேவன் கண்டும் காணாதவர் போல இருந்தார். இருப்பினும் ஓர் மொழி மக்கள் பிரிந்து சிதற பல மொழிகள் பிறக்க செய்தார். வெவ்வேறு பகுதிகளில் குடிபெயர துவங்கினான். குளிர் பிரதேசங்களில் குடிபெயர்ந்தவர்கள் தோலின் நிறம் வெண்மையாயிற்று.
இப்படியாக நிறம், மொழி, காலச்சாரம் தோன்றின வரலாற்றினை சுருக்கமாக பகிர்ந்திட்டோம்.
இத்தனை நடந்த பின்பும் மனிதருள் சில முத்தான தேவ பக்தியானவர்கள் இருக்கவே செய்தனர். தேவனும் அவர்களை ஏற்று கொண்டு அவர்களின் தேவனாயிருந்தார். அவர்களை இஸ்ரவேலர் என்று செல்லமாக பேரிட்டு அழைக்கவும் செய்தார். தேவனை பொறுத்தவரை ஜனங்களை பிரித்து பார்ப்பது சுலபமாக தான் இருந்திருக்க வேண்டும். ஜனங்கள். தம்மை தேவனாக ஏற்று கொண்டு தேவ பிள்ளைகளாக மனம்திரும்பின மக்கள். தம்மை பிரிந்து தங்களுக்கென்று தெய்வத்தையும், தலைவர்களையும் தெரிந்து கொண்ட ஜனங்கள்.
இஸ்ரவேல் ஜனத்தை வழி நடத்த சட்ட திட்டங்களையும், தம் வார்த்தையை உள்ளபடியே உரைத்திட தீர்க்க தரிசியையும் ஏற்படுத்தினார்.
தேவனுடைய பார்வையில் தன்னை ஆராதிக்கும் மக்களும், தன்னைவிட்டு பிரிந்து மீண்டும் திரும்ப நினைக்கும் மக்களும் ஒரே மாதிரி தான். நீண்ட முன்னுரைக்கு காரணம் இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும். இஸ்ரவேலரானலும், பிற ஜாதியானலும் நாம் அனைவரும் ஒரு தாய் மக்களே. தேவனால் உருவாக்கப்பட்ட முதல் மனிதர்கள் ஆதாம் ஏவாள் வம்சத்தினர் தானே நாமெல்லாரும். மொழியினால், இடம் குடிபெயர்ந்தப்படியினால், அனல் மற்றும் குளிர் பிரதேச சிதோஷ்ண மாற்றம் தந்த வெவ்வேறு நிறத்தினால், இறை நம்பிக்கையினால் இந்த உலக மனிதர்களாகிய நாம் வேறுப்பட்டிருந்தாலும் நாம் அனைவரும் ஒர் ஆண்டவர் கைகளின் படைப்புகளே. (அவர்தான் நம் உலக ரட்சகர் இயேசு நாதர்.)
இது கர்த்தருடைய தாசன் யோனாவிற்கு புரிந்துக்கொள்வதற்கு கடினமாயிருந்தது. எதிரி நாட்டு மக்களை மன்னிக்கப்படுவதை நம் தீர்க்கதரிசி யோனாவினால் பொறுத்து கொள்ளமுடியவில்லை. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற பின்னணியில் வந்த யோனாவிற்கு இதுவரை தங்களை கையகப்படுத்தியிருக்கும் தங்களின் எதிரி நாட்டு மக்களை, தேவன் ஒரே அடியில் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட வேண்டும் என்று நினைத்தான். அடிப்படையில் தீய எண்ணங்கள் கொண்ட சத்துருக்களை அழிக்கப்படவேண்டும் என விரும்பினான். நமக்கு கெடுதி நினைக்கும் மனிதர்களுக்கு பதிலடி கொடுப்பதை தானே இயேசுவின் பிள்ளைகள் நாம் கூட விரும்பியிருக்கிறோம்.
எது எப்படியாயிருந்தாலும் தான் சொன்ன தீர்க்கத்தரிசனம் நிறைவேறிவிடவெண்டும் என்று நம்புகிறான்.
கடைசி வரை யோனா மனம் மாறவில்லை என்று ஒரு சாராரும், மனம் மாறிய பின்னர் தான் இந்த யோனாவின் புத்தகத்தை அவனே எழுதியிருக்கக்கூடும் என ஒரு சாராரும் சொல்வதில் நாம் விவாதிக்க போவதில்லை. யோனாவின் புத்தகத்தில் பல மறை பொருள் ஒளிந்திருக்கிறது. யோனா தேவசித்தத்திற்கு கீழ்ப்படியாமல் இடங்கொடாமல் போனது உண்மைதான். அவனிடத்தில் பல குறைகள் இருந்ததும் உண்மைதான். ஆனால் யோனா புத்தகத்தின் மூலம் தேவன் செய்திட்ட தனித்துவமான காரியங்களை ஒருமுறை பட்டியலிட்டு பார்த்தால் யோனாவை குறை கூறுவதை விட்டு நம்மை நாமே ஆராய்ந்துப்பார்ப்போம்.
தனித்துவம் 1:
இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே இஸ்ரவேலரும் புறஜாதியாரும் மீட்கப்பட்டு சபையாக உருவாகும் முன்னரே பழைய ஏற்பாட்டு காலத்தில் புறஜாதியார் தேசத்திற்கு சென்று இறைவார்த்தையை பிரசங்கித்த முதல் மிஷினெரி பணியாளன் யோனா தான்
. சபையின் முதல் கல்லான பேதுரு கூட தேவன் புறஜாதியாருக்கு வைத்திருந்த திட்டத்தை முதலில் புரிந்து கொள்ளவில்லை. தேவனுடைய அன்பின் மனது அதிகமான இஸ்ரவேலருக்கு புரியாத படியினால் அவர்கள் இடறலடையவும் செய்தனர்.
தனித்துவம் 2:
தங்களின் பெரும்பான்மையினரை சிறைப்படுத்தியிருக்கும் தங்களின் எதிரி சிரியாவின் தலை நகர் நாட்டு மக்களை
, 120000 (+இந்த எண்ணிக்கை சிறு பிள்ளைகள் குறிக்கிறது என்பது வேத பண்டிதர் கூற்று) அதிகமான பேர்களை ஒட்டுமொத்தமாக ஓரே நாளில் தன்னுடைய ஓரே பிரசங்கத்தினால் தேவனிடமாய் திருப்பியவன் தான் நம் தீர்க்கத்தரிசி யோனா. . அன்றைய இன்றைய பிரசங்கிமார்கள் இந்த சாதனையை முறியடித்துள்ளார்களா? என்றால் விடை சந்தேகம் தான்.
தனித்துவம் 3:
ஒரு பெரிய திமிங்கல மீனின் வயிற்றில்
3 நாட்கள் இரவும் பகலும் இருந்து உயிரோடு வெளியே வந்து தேவப்பணியை செய்தவன் இந்த யோனா. இதை அநேக அறிஞர்கள் (வேத மாணவர்கள் கூட) நம்ப மறுக்கின்றனர். சுவாச பிராணவாயு இல்லாமல் ஒரு மனிதனால் 3 நாட்கள் வாழ சாத்தியமில்லை என்பது அவர்கள் வாதம். ஆனால் மீனின் வயிற்றில் மனிதன் மூன்று 3 நாள் வாழ்வது சாத்தியம் தான் என்று நிரூபணமாகியிருக்கிறது. நம் தேவன் செய்யும் காரியங்கள் எல்லா மனித அறிவிற்கும் மேலானது. எல்லா அறிவியல் செயல்களின் காரணர் நம் தேவன். வெறும் அறிவியல் கூற்றுகளால் தேவனை அளக்க நினைப்பது அறிவீனம். தேவனால் கூடாத காரியம் ஏதுமில்லை.
தனித்துவம் 4:
மீனின் வயிற்றில் யோனா செய்த ஜெபம் எல்லா தேவ பிள்ளைகளுக்கும் ஒரு சிறந்த ஜெப மாதிரி
. இந்த ஜெபம் நமக்கெல்லாம் புதிய உணர்வூட்டும் எண்ணங்கள். இயேசு கூட முன்னறிவித்தது போல தான் சிலுவையில் மரித்து யோனா போல் மீனின் வயிற்றினில் மூன்று நாட்கள் மூன்று இரவுகள் கல்லறையில் கழித்தே மூன்று நாட்களுக்கு பிறகு தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்.
தனித்துவம் 5:
அன்பே பிரதானம் என்கிற உயர்ந்த கோட்பாட்டினை யோனாவின் வாழ்க்கையில் முன்மாதிரியாக வைத்துள்ளார்
. ஆண்டவரின் அன்பு பொதுவானது, அவர் பட்சபாதமுள்ளவரல்ல. தேவனுடைய இரக்கத்திற்கு முடிவில்லை. ஜாதி, மத, மொழி, இன வேறு பாட்டினை அவரும் பார்ப்பதில்லை, அவருடைய பிள்ளைகளும் பார்த்திடலாகாது என்பதில் தேவனுடைய திட்டங்கள் இருக்கிறது. தேவன் யோனாவிற்கு மாத்திரமல்ல, நமக்கும் திட்டங்கள் வைத்திருக்கிறார்., உழியர்கள் ஆத்துமாக்களை குறித்த கரிசனமுடையவர்களாயிருக்க வேண்டுமென்ற உணர்வை யோனா வாழ்க்கையில் அவனுக்கும், நமக்குமே உணர்த்த விரும்புகிறார். அன்பிற்கு எல்லையில்லை.
தனித்துவம் 6:
ஆண்டவருடைய பிள்ளைகளுக்கும் ஊழியம் செய்பவர்களுக்கும் கூட தற்கொலை எண்ணங்கள் வந்திடும் என்பது யோனா வாழ்வின் மூலம் தெளிவாகிறது
. ஒரு முக்கியமான விஷயம் கவனித்தீர்களா? ஒரு பெரிய திமிங்கலத்தின் வயிற்றில் யோனா 3 நாள் இரவும் பகலும் இருக்கவேண்டுமானால் அந்த திமிங்கலம் பட்டினி கிடக்கவேண்டும் தானே? வானத்து பட்சிகளை கூட பட்டினி போடாத கரிசனமிக்க நம் ஆண்டவர் அந்த பெரிய மீனை பட்டினி போட்டு யோனாவை காப்பாற்றினார், இறுதியில் தம் சித்தம் உணராமல் யோனா மரணத்தை விரும்பின போது, அப்போதும் அவன் மீது அன்பு வைத்து அவனுக்கு தம் மனதை புரிய வைக்க விரும்பினார். ... அவருடைய ஊழியரின் ஆத்துமா, உயிர் ஆண்டவருடைய பார்வைக்கு அருமையானதல்லவா?
தற்கொலை எண்ணங்கள் வரும் போது தேவனுடைய வார்த்தையை சற்று கவனித்து அவர் நமக்கு கொடுத்த வாக்குத்தத்தின் மீது நம்பிக்கை வைத்து அவர் மீது பாரத்தை வைத்து விட்டால் போதும். நம் உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமை நமக்கு கிடையாது. காலங்களே நம் காயங்களை ஆற்றும் மருந்தாகிடும். இந்த துயரமும் சீக்கிரம் கடந்து போகும். விசுவாசித்து முன்னேறுவோம். ஆண்டவர் ஒருபோதும் நம்மை கை விட மாட்டார். நம்பிக்கையாயிருங்கள்.
தனித்துவம் 7:
இந்த குறிப்பு முக்கியமானது
. நம் தேவன் சிறுப்பிள்ளைகள் மேல் அக்கறையுடையவராயிருக்கிறார். ஆதியாகமம் துவங்கி வெளிப்பாடு வரை சிறுவர்களுக்கான தேவதிட்டங்கள் மகத்துவமானவை. சிறுப்பிள்ளைகள் தேவனுடைய முழுமையான ஆத்துமாக்கள்.
சற்று யோசித்து பாருங்களேன்நினிவே மக்கள் அக்கிரமம் கொடிதானபடியானதால் தான், அந்த மக்களை தேவன் அழிக்க சித்தமானார். தங்கள் சாம்ராஜ்ஜியத்தில் இருக்கும் இஸ்ரவேல் நாட்டின் தீர்க்கத்தரிசி தான். ஆனாலும் அவன் சொன்ன தேவனுடைய வார்த்தையை கேட்டு நிஜமாகவே அஞ்சி நடுங்கினார்கள். யோனாவை தீர்க்கத்தரிசியாக மிகவும் மதித்ததினாலே தான் அவன் பிரசங்கத்திற்கு செவி சாய்த்தார்கள். அந்த மனந்திரும்பிய மக்கள், தேவ மன்னிப்பையும் பெற்றனர். யார் பிரசங்கம் கேட்டு தேவ இரக்கம் பெற்றார்களோ அந்த யோனாவை அந்த மக்கள் மிகுந்த மரியாதையாகவும், கனத்துக்குரியவனுமாகவும் தான் பார்த்திருப்பார்கள். ஆனால் ஒரு அனுபவமிக்க ஆண்டவரின் ஊழியன், புதிதாக தேவ பிள்ளைகளாக மாறியிருக்கும் இந்த பட்டின மக்கள் அழிவை காணத்தான் காத்திருக்கிறான் என்று அவர்கள் அறிய நேரிட்டால் அவர்கள் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும்?
ஒரு தேவ ஊழியன் தான் செய்யும் காரியங்களை மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று உணர்ந்து தன் முகபாவம், சுபாவம், நடக்கை, வாயின் அறிக்கை போன்றவற்றால் எல்லாருக்கும் முன் மாதிரியாயிருக்கவேண்டும். இந்த பழைய ஏற்பாட்டு யோனா ஜனங்களிடம் கரிசனமுடையவனாயிருக்க வேண்டும் என ஆண்டவர் எதிர்ப்பார்த்தார். அவனால் அதை செய்யமுடியவில்லை.
நினிவே மக்களை அழிக்காமல், தேவன் சொன்னபடி நிறைவேற்றாமல் போய்விட்டாரே என்ற மனுஷிக சிந்தனையினால், சாவதற்கு விண்ணப்பம் பண்ணினான். நம்மில் அநேகர் இப்படித்தான், சூழ்நிலை சாதகமாயிராவிட்டால் உடனே மாண்டுப்போய் விட துடிக்கிறோம்அது தேவனை வேதனைப் படுத்தினாலும், நம் மனித தகுதி அறிந்து ஆறுதல்படுத்திடவே விரும்புகிறார். யோனாவிற்கும் அப்படியே பேசினார். ஆனாலும் யோனா அவ்வளவு சுலபமாக அமைதிகொள்வதாக இல்லை.
கடைசியாக யோனாவிற்கு ஒரு பாடம் கற்றுத் தரும்படி, ஆண்டவர் ஒரு ஆமணக்கு செடியை ஊருக்கு எல்லையில் வளர செய்திட்டார். அது வெயிலில் நிழல் தந்ததுமறு நாளே தேவன் அதை ஒர் பூச்சி மூலம் வாடி அழியச் செய்தார்வெயில் யோனா மீது பட்டதுயோனாவிற்கு ஆண்டவர் மீது கடும் கோபம் மூண்டதுதன் மூலமாக சொன்ன பெரிய காரியத்தை செய்யவும் இல்லை, தனக்கு நிழல் தந்த அந்த செடியினை அழித்து போட்டு தனக்கு கிடைத்த சிறிது நேர ஆறுதல் கூட கிடைக்க தேவன் அனுமதிக்கவில்லை என்று வெதும்பினான்.
தோழர்களே, சகோதரர்களே, கிறிஸ்துவின் சரீர அவயங்களேவாலிபனே,
இப்படித்தானே மனிதர்கள் நாம் வாழ்க்கையில் நாம் நடாத, கொஞ்சம் கூட பிரயாசம் படாத செடிக்காக கவலைப்படுகிறோம்? நீங்கள் நடாத செடி உங்களை விட்டு பிரியும் போது அதற்காக விசன படுகிறீர்களா? கொஞ்ச நேர ஆறுதல் தந்த செடி எதுவென்று உங்களுக்கு தெரியும்இந்த செடிக்காகப்படும் கவலையை விட்டு சற்று நம்மை சுற்றி இருக்கும் ஆத்துமாக்களுக்காகவும் கவலைப்படுவோமாக
எத்தனை ஆத்துமாக்கள் தேவைகளோடு உங்களை சுற்றி இருக்கிறார்கள் தெரியுமா? உங்கள் நற்செய்தியை எதிர்ப்பவர்களை விட்டு விடுங்கள். நினிவே மக்களை போல நீங்கள் சொல்லும் தேவ போதனைகளுக்காக உங்களுக்கு செவிசாய்ப்பவர்கள் இன்றும் ஏராளமானோர் நண்பர்களே. நாம் பெற்ற இந்த சமாதானம், நம்பிக்கை மற்றவர்களும் பெற்று கொள்ள
கிறிஸ்தவர்கள் நாம் எல்லோரும் அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறோம்.
அத்தியாயம் 3:
தேவை, தியாகமாய் ஊழியம் செய்வோர்!
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும்கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்.
ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். - 1தீமோத்தேயு 6: 6-10
ஒருவேளை நம் உணவிற்காக, உடைக்காக, தற்காலிக உறைவிடத்திற்காக நாம் உலகப்பிரகாரமாக வேலையோ, தொழிலோ செய்ய நேரிடலாம். அதை உண்மையாக செய்வோம். ஆனால் அதெல்லாவற்றை விட முக்கியம் நமக்கு ஆண்டவருக்குரிய காரியங்கள் தானே. எப்போதும் நாமெல்லாம் இந்த பூமியில் கூடாரவாசிகள் தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது. நம் சொந்த வீடும், இன்னப்பிற சொத்துக்களும் பரலோகத்தில் தான் இருக்கிறது. நமக்கெல்லாம் நிரந்தரம் நித்திய வீடு தான்.
இயேசு அறியாத மக்கள் 75 வருட உலக வாழ்விற்காக கவலைப்படுகின்றனர். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாமோ இம்மையான உலக வாழ்விற்கு பிறகான மறுமையான பரம வாழ்விற்குத்தான் எப்போதும் பிரயாசப்படவேண்டும்.
ஆண்டவரின் இந்த பரலோகப்பாதையில் நாம் செய்யவேண்டிய இன்றியமையாத காரியங்கள் இரண்டு தான்...
முதலாவது நம்முடைய தேவனோடான உறவு...
இரண்டாவது நமக்கடுத்த மனிதர்களை குறித்த ஆத்தும பாரத்தின் ஊழியம்.
இதை விட்டுவிட்டால் தேவன் நம்மை விட்டு விடுவார். ஜாக்கிரதையாயிருங்கள். மண்ணுக்குரிய வாழ்வை நம்பி மணவாளனை கோட்டைவிட்டு விடாதீர்கள். பெரிதான நோக்கம் உங்களை குறித்து ஆண்டவருக்கு உண்டு. ஒரு தாலந்தை பெற்று அதை புதைத்துப் போட்ட அந்த சோம்பேறி ஊழியனை போலிருக்க வேண்டாம்.
கோபப்பட்ட யோனாவிடம் கூட தேவன் அன்பாக இடைப்படுகிறார். நம் ஆண்டவர் தமக்காக ஒடி ஒடி உழைக்கும் ஊழியனிடம் பேசுபவர். தவறு நம் மீதே இருந்தாலும் பேசுகிற தேவனய்யா நம் தேவன். நம்மை மற்றவர்கள் புரிந்து கொள்வதை விட, நமக்குரியவர்கள் புரிந்து கொள்வதை விட, ஏன் நம்மை நாமே புரிந்து கொள்வதை விட நம்மை முழுவதும் புரிந்து கொள்பவர் அவர் ஒருவர் தானே, அன்பானவர்களே. ஒருநாளில் தோன்றி ஒரேநாளில் அழியும் செடி ஒருவேளை சற்று இளைப்பாருதலை தரலாம். ஆனால் அதைவிட முக்கியமானது ஊழியமும் ஆத்துமப் பாரமும் தான். யோனாவின் ஒரு நாள் ஆமணக்கு செடி போன்ற இழப்புகள் வரத்தான் செய்யும். எத்தனை இழப்புகள் வந்தாலும் அதை தாங்கும் பெலனை தம்மை சார்ந்திருக்கும் தாசர்களுக்கு தருவார்.
காலஞ்சென்ற அன்பின் அப்போஸ்தலர் சகோதரர் டி ஜி எஸ் தினகரன் அவர்கள் ஊழியத்திற்காக சென்ற போது அவருடைய மகள் விபத்தில் உயிரிழந்தார். அவருடைய குடும்பமே சோகத்தில் அமிழ்ந்தது. மற்றவர்களுக்கெல்லாம் தீர்க்கத்தரிசனம் சொல்லும் இவர் உண்மையில் தீர்க்கத்தரிசியாயிருந்தால் தன் வாழ்வில் நடக்கப்போகும் துயரம் எப்படி இவருக்கு தெரியாமல் போனது என்று அனைவரும் கேட்பார்களே என்று கதறினார். மனம் வருந்தினார். தன் தீர்க்கத்தரிசனத்தை இனி எப்படி மற்றவர்கள் நம்புவார்கள் என வேதனைப்பட்டார். அன்பின் தேவன் அவரோடு இடைப் பட்டார். சோர்ந்து போனவர்களுக்கு சத்துவமளிக்கும் தேவன் சகோதரர் டி ஜி எஸ் தினகரன் அவர்களை தம் ஆவியினால் அபிஷேகித்தார். இன்னும் கிருபை வரங்களை அளவில்லாமல் தந்தருளினார். அவர் ஊழியம் உலகமெங்கும் விரிவடைந்தது. ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் ஆத்துமாக்கள் அவர் ஊழியம் மூலமாக தொடப்பட்டனர். தேவ ஊழியம் செய்யும் வாழ்வில் இழப்புகள் வரத்தான் செய்யும். அதனால் நாம் இன்னும் தேவனிடம் கிட்டி சேருவோம்...
இழப்புகள் பெரும்பாலும் தேவ கிருபையில் நாம் வளரவே உதவுகிறது. அதன் மூலமாக தேவனுடைய இழப்புகளை யோனாப்போல நமக்கும் புரியவைக்கவே தேவன் முயற்சி செய்கிறார். தேவன் ஆத்துமாக்களை குறித்த தம்முடைய பாரம், கரிசனை நமக்கும் அவசியம் தேவை என்பதால் தான் பல வழிகளில் நமக்கு அதை புரிந்து கொள்ள நம் போக்குக்கே விட்டுவிடுகிறார்.
சிறியவர்கள், பெரியவர்கள், நண்பர்கள், எதிரிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என்று ஒவ்வொரு ஆத்துமாவும் ஆண்டவருக்கு முக்கியம் பிரியமானவர்களே! யாரையும் தவறியும் கூட தவற விடாதீர்கள்.
ஒருவேளை கனவுகள் மூலம், தரிசனம் மூலம், தீர்க்கத்தரிசனம் மூலம் ஆண்டவர் காட்டும் வருங்காலத்திய அழிவுகள் எல்லாமே, நமக்கு திறப்பின் வாசலில் நின்று நாம் ஆத்துமாக்களுக்காக ஜெபிக்கும்படியான எச்சரிக்கை மணியோசை தான் நண்பர்களே!
அத்தியாயம் 4:
தேவை, சிலுவை சுமக்கும் கிறிஸ்தவன்!
இந்த நம் யோனா செய்ய தவறினதை பின்னர் யோனாவிலும் பெரியவராயிருந்து இயேசு செய்து முடித்தார். தம் மக்களை, மட்டுமல்ல தம்மை தேடும் பிற ஜாதி மக்களையும் தன்னிடம் சேர்த்து கொண்டார். சத்துருக்களையும் சிநேகிக்க பிரசங்கித்த இயேசு சிலுவையிலே தன்னை சிலுவையில் அறைந்த சத்துருக்களுக்காக தாங்கள் செய்வதென்று இன்னதென்று அறியாதிருக்கிறார்களே, இவர்களை மன்னியும், மன்னியும், மன்னியும்…” என்று அந்த தாங்கொண்ணா வலியிலும் தொடர்ந்து மன்றாடி கொண்டே இருந்தாராம். பாவம் செய்யும் மக்களுக்கென்று தண்டனை விதிக்கிற நீதியுள்ள தேவன், தன்னுடைய சிருஷ்டிகள் மாண்டுபோவதை கண்டு மனஸ்தாபப்படவும் செய்யும் இரக்கமுள்ளவர்.
யார் வேண்டும் பரபாசா? இயேசுவா?
யோனாவோ தனக்கு தனிப்பட்ட முறையில் எந்த தீங்கும் செய்யாத நினிவே மக்களை மன்னித்திட முடியவில்லை. இயேசு எந்த மக்களுக்காக பிரசங்கித்தாரோ, ஜெபித்தாரோ, நோய்கள், பேய்கள் ஒட்டினாரோ, அற்புதங்கள் செய்தாரோ அந்த மக்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு தச்சனின் குடும்பத்தில் பிறந்த இவர் எப்படி தங்களுக்கு இராஜாவாக இருக்கமுடியும் என்ற பூமிக்குரிய அறிவு அவர்களை இரட்சிக்கப்பட விடவில்லை.
ஒரு நிலை வந்தது, குற்றவாளி பரபாஸ் விடுதலை செய்யப்பட வேண்டுமா? அல்லது ஒரு குற்றமும் செய்யாத இயேசு விடுதலை செய்யப்பட வேண்டுமா? என்றப்போது அந்த மக்கள் பரபாசை விடுதலை செய்யுமாறு கூக்குரலிட்டனர். இயேசுவை சிலுவையிலறையுமாறு கூக்குரலிட்டனர். இந்த பரபாச் யார் என்று அவர்களுக்கு தெரியாதா? தெரிந்தும் ஒரு பாவமும் அறியாத இயேசுவை சிலுவையில் அறைவது அவர்களுக்கு சந்தோஷமாயிருந்த்து. ஆம் இன்றும் நம் அலுவலகத்தில், சமூகத்தில், சுற்றத்தில் இது தான் நடக்கும். நாம் பாவமற்றவர்கள் என்று தெரிந்தும் நம்மை குற்றப்படுத்துவார்கள்... தீங்கிழைக்க ஒருமனப்பட்டு கூட்டமாய் வருவார்கள்.
பச்சை மரமாகிய இயேசுவிற்கே அந்த பாடுகள் என்றால், பட்டுப்போன மரமாகிய நமக்கு எத்தனை பாடுகள் இருக்கும்?
இயேசு மரணப்பரியந்தம் தம்மை முற்றிலும் தாழ்த்தி தன் பரிசுத்தமான, குற்றமற்ற இரத்தத்தை முழுவதுமாக சிந்தி இந்த உலகை இரட்சித்தார். நாம் கூட ஆத்துமாக்களை தேவனுக்கு சேர்க்க வேண்டுமானால் நாம் மற்றவர்கள் செய்யும் தப்பிதங்களை மன்னித்து நம்முடைய குற்றமற்ற இரத்தம் சிந்தப்பட அனுமதிக்கவேண்டும். அறிந்தும் அறியாமலும் நம்மை சாக விட்டு பரபாசிக்கிற்கு வாழ்வு தர மக்கள் முன்வருகிறார்கள். தம்மை வேண்டாமென்று தள்ளின மக்களை தேவன் மன்றாடவில்லையா? அவர் போன அடிச்சுவடில் போகும் நாமும் தள்ளிவிடும் மக்களுக்காக ஜெபிப்போம். அதில் தான் நம்முடைய சாட்சி இருக்கிறது. நம்முடைய மேன்மை இங்கு இல்லை இனிமேல் வருகிறது. சிலுவையில்லாமல் சிங்காசனமோ, கீரிடமோ இல்லை.
பாவத்தை வெறுக்கும் தேவன் பாவிகளையோ நேசிக்கிறார் என்கிற உண்மை நமக்கெல்லாம் தெரியும் தானே. தேவனை தங்கள் தெய்வமாக ஏற்று கொள்பவர்கள் எந்த இன, ஜாதி, மத பிரிவு வித்தியாசமின்றி அவர்களுக்கு ஊழியம் செய்ய வேண்டும். இது ஊழியம் செய்யும் மக்களுக்கு மாத்திரமல்ல, இஸ்ரவேலர் அனைவரும் ஊழியம் செய்ய ஆண்டவர் விரும்புகிறார். இயேசு காலத்தில் கூட கிறிஸ்தவ விசுவாசிகளுக்கென்று ஊழிய திட்டங்கள் தேவன் வைத்திருக்கிறார். ஆக நம் அனைவரையும் ஊழியம் செய்யும் படிக்கே தேவன் அழைத்திருக்கிறார். நமக்கு கொடுக்கப்படும் அந்த ஊழியத்தில் நாம் ஆத்தும பாரத்தினால் நிறைந்து காணப்படவேண்டும்.
இன்னும் எவ்வளவு காலம் தான் நாம், சுய நலமாகவே நமக்காக, நம் குடும்பத்திற்காக ஜெபிப்போம். சற்று அண்ணாந்து ஏறிட்டு பார்ப்போம். வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத மக்கள் ஏராளம், ஏராளம்...
நாம் இந்த உலகத்தில் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, கொண்டு போவதுமில்லை.
நம்முடைய சொத்துகளோ, பட்டமோ, பதவியோ, பணமோ எதையும் நாம் மரித்தப்பிறகு கொண்டு போவதில்லை. இயேசுவிற்காக, அவர் நாமத்திற்காக எதை செய்தோமோ அதுவே என்றும் நிலைத்திருக்கும். இன்னும் பணம், இன்னும் சொத்து என்று நம் இருதயம் அடித்துக்கொள்ளாதபடிக்கு எச்சரிக்கையாயிருபோம். அதைவிட இன்னும் ஒரு ஆத்துமா, இன்னும் ஒரு ஆத்தும, நாம் ஊழியம் செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நம் சிந்தனை முழுவதும் வியாபித்திருக்கட்டும். ஆண்டவருடைய மகிமையான திருப்பணிக்குத்தான் நாம்.
என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; - மத்தேயு 19:29
இயேசுவை அறியாத மக்களுக்காக நாம் அழுது புலம்பி ஜெபிப்போம். சுய நலமில்லாமல், ஆத்தும பாரத்தோடு. இது தான் உண்மையான ஜெப ஆவி.
ஊழியம் செய்வோம், தியாகத்தோடு, இழப்புகளை பொருட்படுத்தாமல். தன்னலமில்லாமல்.
சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.

நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற் போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான் நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.  - எசேக்கியேல் 3:18-19
தேவன் பொய்யரல்ல... அவர் சொல்வதை சிலவேளை அவருடைய உருக்கமான இரக்கத்தினால் செய்கிறதில்லை. அதற்காக வருந்தும் யோனாயிருக்கப் போகிறோமா இல்லை யோனாவிலும் பெரியவர் நமக்கு காட்டின சிலுவைப்பாதையில் சிலுவை சுமக்கப்போகிறோமா?
ஆம். கிறிஸ்தவம் பூமிக்குரிய சந்தோஷங்களையெல்லாம் வாரியிறைக்கும் மதமல்ல.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் எவ்வளவாய் பாடுகள் சுமந்து பரலோகம் செல்ல வேண்டுமோ அதற்கான கிருபையை ஊற்றும் மார்க்கமே தான் இது.
ஊழியத்திற்காக எதையும் செய்வோம் சிலுவை வீரர்களே!
நாம் உயிரோடு இருந்து ஊழியம் செய்தால் ஆண்டவருக்கு ஆதாயம். இறந்தால் நமக்கு மோட்சப்பாக்கிய ஆதாயம். ஆண்டவரின் ஊழியத்தில் எப்போதும் அலுவலாக நீங்கள் இருக்கும் பட்சத்தில் சாவதற்கு நேரமேது?
கர்த்தர் உங்களை அசீர்வதிப்பாராக
.

Comments

  1. Excellent blog. Nice explanation and narration by chapters. Keep the good work happening brother. Translating the same in English will benefit many. God bless you.

    ReplyDelete
  2. Dear Robert Anna,
    It's is such a blessing to get valuable feedback from a senior brother like you.
    It is purely by the grace of God.
    Yes. English translation work also done..
    Please pray for us to continue this ministry.

    ReplyDelete

Post a Comment