“தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்;
நீர் செய்ய நினைத்தது தடைபடாது” - யோபு 42:2
புது வருட வாக்குத்தத்தம் 2016நாட்களை விசேஷித்து கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்து கொள்ளுகிறான்.நாம் கூட இந்த ஒரு காரணங்களுக்காகவே புதிய வருடம் ஆசரித்து அதனை கர்த்தர் பாதத்தில் இருந்து பெற்று கொள்கிறோம். 2015ம் வருடம் முடிந்து விட்டது. நம்மில் எத்தனை பேருக்கு இது ஆசீர்வாத ஊற்று பெருக்கேடுத்த வருடம்? என்று கேட்டால் ஒரு சிலர் சந்தோஷமாக தலையாட்டலாம்... உங்களுக்கு மேலும் புதிய ஆசீர்வாதங்கள் இந்த புதிய வருடம் கொண்டு வருவதாக...!
ஆனால்....! ஏன் எனக்கு அந்த காரியம் சம்பவித்தது? ஏன் எனக்கு இந்த துயரம் நேரிட்டது? என்னை தேவன் ஏன் கைவிட்டு விட்டார் என அங்கலாய்த்து இருதயத்தில் துக்கம் அடைக்க கேள்வி கேட்பீர்களானால், அன்பான சகோதரனே, சகோதரியே இந்த செய்தி உங்களுக்கானதே...!
உங்களை போலத்தான் ஒரு பக்தன் தன் தாங்கொண்ணாத துயரங்களுக்கு காரணம் புரியாமல் ஏன் எனக்கிந்த தீங்கிழைத்தீர் ஆண்டவரே... என முன்பொரு காலத்தில் வேதனையின் எல்லைக்கே சென்று திரும்பிட விடைத்தெரியாமல் வெதும்பி கொண்டிருந்தான்... அவனை போல நிச்சயமாக நாம் யாரும் துன்பம் அனுபவித்திருக்க முடியாது... நீதிமான்களுக்கெல்லாம் நீதிமானான யோபு கிழக்கத்திய நாடுகளில்... மிகவும் பிரசித்திப்பெற்ற யசுவரிவானாயிருந்தான். எந்த ஒரு சிறு தவறும் நேர்ந்திடாமல் கர்த்தருக்கு மிகவும் பயந்து உத்தமனாயிருந்தான். என்றாலும் ஒரு நாள் வந்தது. அந்த ஒரே நாளில் அவனுடைய ஆஸ்தி, சொத்து, சம்பத்து என அவனுக்கிருந்த எல்லாவற்றையும் இழந்து அவனுடைய 10 பிள்ளைகளையும் அடுத்தடுத்து பறிகொடுத்தான். அப்போதும் யோபு தேவனுக்கு விரோதமாக எதுவும் பேசிடவில்லை.
(யோபு 1:20-22.) அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:
நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான். இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.
தான் நேசித்த தன் 10 பிள்ளைகள் மரணித்தப்பிறகும், ஆஸ்தியெல்லாம் இழந்தப்பின்னும் தன் விசுவாசத்தில் உறுதியாயிருந்த யோபு எப்பேற்பட்ட நீதிமானாயிருந்திருக்கவேண்டும்?
ஆனாலும் வாதை யோபினை விட்டப்பாடில்லை... கொஞ்ச நாளில் யோபின் சரீரம் அவன் உச்சந்தலை துவங்கி பாதம் மட்டும் ஒரு இடம் பாக்கியில்லாமல் கொடிய பருக்களால் வாதிக்கப்பட்டது....
அவன் ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான். –யோபு 2:8
அத்தனையும் மொத்தமாய் இழந்தவனுக்கு மிச்சம் இருப்பது அவனுடைய மாம்சமான ஓரே மனைவி மட்டும்... அவளும் அவன் பாடு உக்கிரமானது என அறிந்தவளாக,
(யோபு 2:9-10) அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும் என்றாள்.
அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.
நம் வேதம் இப்படித்தான் சொல்கிறது.... இந்த யோபு தவறிப்போய்கூட தன் உத்தமத்தில் இருந்து பின்வாங்கிடவில்லை. முறுமுறுக்கவில்லை... ஏன் என்னை மட்டும் தேவன் இப்படி சோதிக்கிறார் என்று கேள்வி கணைகளை வீசிடவில்லை...
ஒருவேளை இது போன்ற சூழ்நிலை நம்மை போன்றோர்க்கு வரும்போது, கடவுளே உனக்கு கண்ணில்லையா, இதயமேயில்லையா, ஏன் என்னை மட்டும் இப்படி சோதிக்கிறீர் என்ற கேட்டுருந்தால் இன்றைக்கு நமக்கெல்லாம் ஒரு பாடத்தினை தேவன் இந்த சிறிய வலைப்பதிவு மூலம் சொல்லித்தரப்போகிறார்...
(யோபு 2:11-13) யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல்சொல்லவும் ஓருவரோடே ஒருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள். அவர்கள் தூரத்தில் வருகையில் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, அவனை உருத்தெரியாமல், சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் சால்வையைக் கிழித்து, வானத்தைப் பார்த்து: தங்கள் தலைகள்மேல் புழுதியைத் தூற்றிக்கொண்டு, வந்து, அவன் துக்கம் மகாகொடிய துக்கம் என்று கண்டு, ஒருவரும் அவனோடு ஒரு வார்த்தையையும் பேசாமல், இரவுபகல் ஏழுநாள், அவனோடுகூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள்.
உடல் உருத்தெரியாமல் போன யோபின் வாழ்வு இனி துளிர்விடுமா? ஆம் நம்முடைய வாக்குத்தத்தம் இனி தான் துவங்குகிறது.... தொடர்ந்து கவனிப்போம்.
1. கர்த்தர் நம்முடைய சிறையிருப்பை திருப்புவார்.
பிரியமானவர்களே, தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. - மத்தேயு 19:26
யோபினை துக்கம் விசாரிக்க வந்த 3 நண்பர்களும் அவன் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கவேண்டும்... அதனால் தான் அவனை உருத்தெரியாமல் பார்த்தபொழுது, 7 நாட்கள் அவனோடு ஏதும் பேசிடாமல் மெளனமாய் அவனோடு அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் தன் பிறந்த நாளினை சபித்து தன் துயரம் குறித்து விவரிக்கிறான் யோபு... அங்கே தானே அந்த நீ_____ண்ட உரையாடல் துவங்குகிறது....
ஒருவர் மாறி ஒருவர் பேச்சை தொடர்கின்றனர்....எந்த தவறும் செய்யாமல் தேவன் யாரையும் தண்டிப்பதில்லை என்று கூறுகின்றனர்... நல்லது செய்தால் ஆசிர்வாதமெனவும் யோபு ஏதோ தேவனுகெதிராக தவறு செய்ததினால் தான் அவனுக்கு இந்த வாதை என்று வாதிடுகின்றனர். தேவனே தங்களை ஞானத்தினால் நிரப்பியுள்ளதாகவும் யோபுவிடம் தாங்கள் பேசுவது தேவ வார்த்தை என்றும் துணிந்து பொய்யாய் பேசுகின்றனர்... யோபின் வார்த்தைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. யோபு செய்யாத பாவத்திற்கு அவனை தேவனிடம் மனம்திரும்ப சொல்கின்றனர். ஒருவேளை யோபை போல நாம் பாடனுபவிக்கவில்லையென்றாலும் கூட அவனை போல ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் சந்தித்துவருகிறீர்களா? நாமும் கூட நம்முடைய துயரத்தில் வேதனைப்படும்போது நம்மை நேசிப்பவர்கள் ஏன் தேவ மனிதர்கள் கூட நம்மை குற்றப்படுத்தி ஈட்டியாய் வார்த்தைகளை எறிவார்கள்.... தேவப்பிள்ளையே சோர்ந்துப்போகாதே உன் சிறையிருப்பை கர்த்தர் திருப்புவார்... அப்பொழுது உன் நீதி விளங்கும். உன் துக்க நாட்கள் முடிந்துவிட்டன... இனியெல்லாம் சுக வாழ்வு தான்.
(யோபு 42:7-10) கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை. ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவன் முகத்தைப் பார்த்து, உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத் தக்கதாக நடத்தாதிருப்பேன்; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை என்றார். அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார். யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.
அருமையான சகோதரனே, சகோதரியே... நெடுகவே உங்கள் வாழ்வில் சோதனை தொடர்வதில்லை.. நாம் அனுபவிக்கும் பாடுகளை லேசான உபத்திரவமென சத்திய வேதம் போதிக்கிறது. நாம் சோதிக்கப்படும் போது யோபுவிற்கு கூட இல்லாத ஒரு பாக்கியம் நமக்கு உண்டு.... ஆம் நம் ஆண்டவர் இயேசு நம்மை போல பாடனுபவித்ததினால் நமக்கு உதவி செய்கிறார். அவர் உங்களை கொண்டு செய்ய நினைத்து தடைப்படாது.
சோர்ந்துப்போகாமல் உங்கள் பிரச்சனைகளுக்காகவே ஜெபித்து கொண்டிராமல் மற்றவர்களுக்காகவும் ஜெபியுங்கள். கர்த்தர் உங்கள் சிறையிருப்பை திருப்பி மீண்டும் ஆசிர்வாதமாக்குவார்.
2. நம் மீட்பர் இன்றும் உயிரோடிருக்கிறார்.
அவர் நம் இருளை வெட்டவெளிச்சமாக்குவார்.
உடைமைகள் எல்லாம் இழந்து, நேசித்தவரெல்லாம் மாண்டு போய்விட்ட
துர்ப்பாக்கிய சூழ்நிலை, தன் உடம்பெல்லாம் பார்ப்பவர் இளக்காரமாக
பரியாசிக்கும் பருக்கள் வந்த மனிதன் யோபுவிற்கு மனதிலும் வலி. உடலிலும்
வலி. நமக்கும் தான் இதுபோன்ற விவரிக்க இயலா . தாங்க முடியாத வலிகள்
வரும்போது... அந்த வலி என்றைக்கு தான் முடியும் ஆன்டவரே என்று நமக்கு
நீண்ட எதிர்ப்பார்ப்பு நமக்குள் வருவது இயற்கை.
சிப்பிக்கும் அதுபோன்று தான் வலி உருவாகும் நேரம் வருமாம். மிகுந்த வலி வேதனை உச்சக் கட்டமடையும் நேரம், அந்த வலியே சிப்பிக்குள் ஒரு திரவமாய் உருவாகிடும். அந்த திரவம் தான் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படும் முத்துவாக உருமாறுகிறது. சிப்பிக்குள் புறப்பட்ட வலிகளே முத்துவாக பிறக்கிறது. ஒருவேளை அன்பர்களே, எந்த வேதனை
வலிகளில்லாமல் வாழும் பிறரை பார்த்து நாம் நம்மை ஒப்பிட்டு பார்த்து ஏங்கினால் நமக்கு வரும் வலிகள் யாவும் நமக்கு மாத்திரமே ஒப்பற்ற உயர்வை நமக்கு தர போகும் என்று உணர்ந்திடுவோமா அன்பர்களே?
பண்டைய காலத்தில் எதோ ஒரு காரணத்தினால் கடன்பட்டு அதை திருப்பி கொடுக்க இயலாத எல்லாம் இழந்த ஒருவரை சந்தியில் அடிமையாக்கி ஒரு கடைசி வாய்ப்பாக அவருக்கு உரிய உறவினரோ நண்பரோ அவருக்குரிய பிணையத்தோகை கொடுத்தால் அவருக்கு விடுதலைக் கொடுப்பார்கள். இல்லாவிடில் அவர் ஜென்ம அடிமையாகி போவார்.
இந்த எதிர்பார்ப்பில் தானோ "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்" (-யோபு 19:25) . என்று சொல்லியிருப்பான். அந்த பிணையத்தோகை கொடுப்பவரைத் தான் இங்கு மீட்பர் என யோபு குறிப்பிடுகிறார். தன்னை மீட்பவர் எந்த உறவுமில்லை, நண்பனுமில்லை என்று புரிந்துகொண்டு இறைவனையே யோபு தன் மீட்பராக நம்புகிறார். அவர் தன்னை நியாயத்தீர்ப்பு நாளில் வருவதை என் கண்கள் காணும் என தீர்க்கதரிசனம் உரைக்கிறான்.
தேவனை நெருங்கி ஜீவிப்பவர்களுக்கு தான் இந்த உலகில் உபத்திரவம் அதிகம் என்று அநேகர் சொல்லுவார்கள். வேதம் கூட "நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது".(சங்கீதம் 34:19,22) என்று நம்மை திடப்படுத்துகிறது. இந்த பதிவை வாசிக்கிற கிறிஸ்துவில் பிரியமானவர்களே, வியாதியின் அகோரத்தால் அவதிப்படுகிறீர்களா? எல்லாம் சுமூகமாக செல்லும் போது உங்களை பார்த்து ஆச்சரியப்பட்டவர்கள் இன்று உங்கள் வாதை கொடியதாகிவிட்டதால் அதையே உங்கள் மேல் விழுந்த சாபம் எனத் தூற்றுகிறார்களா? காரணமில்லாமல் எல்லாராலும் பகைக்கப்படுகிறீர்களா?
கவலை வேண்டாம் சர்வ வல்ல தேவன் நம் மீட்பர் இன்றும் உயிரோடிருக்கிறார். அவர் அனுமதியின்றி எந்த காரியமும் நடக்கிறதில்லை. மனிதர்கள் நம்மை புரிந்துகொள்ளமுடியாது தான். கர்த்தர் நம்மை முழுவதும் அறிந்து புரிந்து வைத்திருக்கிறார். அவர் நம்மை எல்லா இக்கட்டிலிருந்தும் உங்களை விடுவிப்பார். உங்கள் நீதியை பட்டப்பகல் போல ஒருநாள் இந்த உலகத்திற்கு வெளிப்படுத்துவார். பொறுமையாயிருங்கள். கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் செய்ய நினைத்தது தடைபடாது.
இது ஒரு சிட்சையெனில், நம்முடைய மாமிசத்தில் உள்ள அழுக்கான சுபாவத்தை பொன்னை புடமிடுமிறது போல தேவன் நம்மை உருக்கி சுத்தமான பொன்னாக மாற்றுவது இன்னொரு வகை சிட்சை.
எது எப்படியாயினும் நம்மை பரலோக இராஜ்ஜியத்திற்கு முன்குறித்த ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் குறித்திருக்கிறார். நமக்கு எல்லாமே குறிக்கப்பட்டுள்ளது. நாம் பேசும் மொழி, நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பெற்றோர் பிள்ளைகள், உறவினர். எல்லாமே முன்குறிக்கப்பட்டுள்ளது. திருமணம் கூட பரலோகத்தில் நிச்சயமாகிறது என்றும் நாம் சொல்ல கேட்கிறோம்.
ஆம் எனக்கன்பானவர்களே! நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு கேலி கிண்டல் சிரிப்பாக இருக்கலாம். நமக்கு ஏன் இந்த பெலவீனம், குறைபாடு்? ஏன் எனக்கு பெற்றொரில்லை, ஏன் குழந்தையில்லை? ஏன் எனக்கு மற்றவர்கள் போல வசதியில்லை என்று நீங்கள் நொந்து போகவேண்டாம். உங்கள் வந்திட்ட வியாதியை பார்த்து இந்த உலகம் உங்கள் கதை முடிந்தது என்று சந்தோஷமடையலாம். கர்த்தர் அறியாமல் ஒரு தலை முடியாகிலும் கீழாக விழாது. நம்பிக்கையை மாத்திரம் இழக்காதிருங்கள். யோபை போலவே வியாதியின் கோரத்திலிருந்து மீட்டவர் உங்களுக்கும் விடுதலை கொடுத்து உங்களை கொண்டு உங்கள் சரீரத்தை கொண்டு அவர் குறித்த வேலையை நிறைவேற்றியே தீருவார்.
கர்த்தர் என்றைக்கும் ஆளுகை செய்கிறார். நம்முடைய எதிர்காலத்தை குறித்து கரிசனை உடையவராயிருக்கிறார். அவர் நமக்கு காரணமில்லாமல் எதையும் அனுமதிக்கிறதில்லை. அவர் நம்மை நேசித்தப்படியினால் தம் சாயலாகவே நம்மை படைத்திருக்கிறார்.
நம்மை படைத்தவர் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எப்படியாக இருக்கவேண்டுமென நாம் பிறக்கமுன்பாகவே எல்லாவற்றையும் குறித்திருக்கிறார்.
நம்மை படைத்த தேவன் அன்பாகவே இருக்கிறார். அவரை விசுவாசிக்காத மனிதர்களையே அவர் நேசிக்கும் போது அவரை நம்பி எல்லாவற்றிலேயும் தேவனை யே சார்ந்து வாழும் மனிதனை அவர் நேசிக்காமல் இருப்பது எப்படி?
அவர் நமக்கு நன்மையல்லாமல் தீமை செய்கிறதில்லை. அவர் உங்களுக்கு குறித்ததை எப்படியும் நிறைவேற்றுவார். பயம் வேண்டாம்.
ஆண்டவர் நம்மோடிருக்கிறார்.

3. எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்.
கிறிஸ்துவில் பிரியமான இணையத்தள, மற்றும் கைபேசி அன்பர்களே !
கிறிஸ்துவில் பிரியமான இணையத்தள, மற்றும் கைபேசி அன்பர்களே !
யோபு சொல்லும் இன்னும் ஒரு நம்பிக்கையின் வாக்கு, "ஆண்டவர் எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்" என்பதாகும்.
யோபு
நீதிமானா இல்லையா என்று ஆராயும் நண்பர் கூட்டம் ஒரு புறம், அவன் வாழ்வதில்
இனி அர்த்தமில்லையென்று தேவனை தூஷித்து மாண்டுப்போகும்படி அறிவுறுத்தும்
மனைவி இன்னொரு புறம், அவனிடத்தில் நன்மைகள் பெற்றும் அவனுடைய கீர்த்தி
இனியில்லை என்பதால் அவனை அவமானப்படுத்தி எள்ளி நகையாடும்
சுற்றுபுறத்தாரும், மாமனிதனாக வீறுகொண்டு நடமாடிய யோபுவை கண்டு அஞ்சி
ஒதுங்கி பொறாமை கொண்ட இப்போது இளக்காரமாக பரிகசிக்கும் இளைய தலைமுறை
வாலிபர் ஒருபுறம், என நாலப்புறமும் தன்னை புரிந்துகொள்ள முடியாத எதோ
ஒருவகையில் தன்னை எதிர்த்து நிற்கும் மனிதர்களை கண்டு இனி அவனுடைய ஒரே
நம்பிக்கையான தேவனையே சார்ந்து கொண்டு சொல்லுகிறான், "அவர் எனக்கு
குறித்திருக்கிறதை நிறைவேற்றுவார்"
அவனுடைய
விசுவாசம் நிறைவாக இருந்தபடியினால் தான் அவனால் உபத்திரவத்தின்
உச்சத்திலும் தேவனை நம்ப முடிந்தது. பொதுவாக நாம் வேதனையின் ஊடாய்
செல்லும்போது எந்தவிதமான மனிதர்கள் கூட நமக்கு உதவ முடியாத போது தேவனும்
கூட மெளனமாயிருந்தால் நம்முடைய விசுவாசமும் அசைந்து விட கூடும் தான். இங்கே
தான் யோபின் நீண்ட பொறுமையை நாம் பார்த்து கடைபிடிக்க வேண்டும். கடைசிவரை
தங்கள் விசுவாசத்தை காத்துக் கொண்ட வேத பக்தர்களும் ஊழியர்களும் நமக்கு ஒரு
மாதிரியாக திருஷ்டாந்தமாக வாழ்ந்து தங்கள் ஓட்டத்தை முடித்துள்ளனர். கொஞ்ச
காலம் தான் இந்த பூவி வாழ்க்கை. அது முடிந்தவுடன், மேலான மகிமையான
வாழ்க்கை நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது. தேவனை காணாதிருந்தும்
விசுவாசிக்கும் அவருடைய மக்கள் பாக்கியவான்கள். மனம் மடிவடையாமல் இந்த
விசுவாச ஓட்டத்தை தொடர்வோம் பிரியமானவர்களே.
உங்கள் உத்தியோகத்தில் உங்களுக்காக ஆண்டவர் குறித்த ஆசிர்வாதத்தை ஒருவரும் தடுக்க முடியாது.
உங்கள் உத்தியோகத்தில் உங்களுக்காக ஆண்டவர் குறித்த ஆசிர்வாதத்தை ஒருவரும் தடுக்க முடியாது.
எல்லாம்
இழந்து விட்டோம், இனி நம்பிக்கையில்லை என்ற உணர்ந்த நிலையிலிலும்,
நன்பர்களிடம் வாதம் செய்யும் போது கூட, யோபு அதிகமாக தேவனையே நோக்கி
பேசுகிறான். காணாதிருந்தும் தேவன் மேலிருந்த அந்த விசுவாசம் கொஞ்சமும்
யோபுவிற்கு குறையவில்லை. ஒருவேளை ஒரு துர்ச்செயல் நடந்தவுடன் அநேகரின்
விசுவாசம் இங்கே கேள்விக்குறியாகிவிடுகிறது. எத்தனை மக்கள் இந்த
நம்பிக்கையில்லாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்? உலகத்திற்கு
வெளிச்சமாயிருக்க வேண்டிய கிறிஸ்தவர்களே தங்கள் வாழ்வை துரிதமாக மாய்த்து
கொள்கிறார்களே? வாழ்க்கையை முடித்து கொள்ள காட்டும் அந்த வேகத்தினை
தேவன்பால் திரும்பி
விண்ணப்பிக்க காட்டியிருந்தால் எத்தனை பேர் வாழ்வு துளிர்விட்டிருக்கும்?
என் ஜனம் அறிவில்லாமையினால் சாகிறார்கள் என்ற வேத வசனம் எத்தனை உண்மையானது?
கிறிஸ்து பிறக்கும் முன்காலத்தில் வாழ்ந்த யோபுவிற்கே இத்தனை பொறுமை,
உறுதி இருக்குமேயானால் மனு அவதாரம் எடுத்து மனிதனின் பாவம் போக்க
சிலுவையில் தன்னை பலியாக கொடுத்து அவர் சிந்தின இரத்தத்தால் நம்மையெல்லாம்
நீதிமான்களாக மாற்றியிருக்கும் இயேசு நாம் தேவ விசுவாசத்தில் எவ்வளவு
உறுதியாயிருக்க வேண்டும்?
தேவனிடத்தில்
இதுவரை நன்மையை பெற்றிட்ட நாம் இப்போது தீமையை பெற்றுக்கொள்ளும் போது
குறைசொல்லக்கூடாது என தன் மனைவிக்கு போதித்தவன் மீண்டும் தன் ஆஸ்தி
கிடைக்கவேண்டும் என்று கேட்கவில்லை, தன் பிள்ளைகள் ஏன் சாக வேண்டும் என்று
தேவனிடம் குறை கேட்கவில்லை. இத்துடன் தனக்கு முடிவு காலம் என்றும்
நினைத்திடவில்லை. தேவன் தன்னை குறித்து வைத்துள்ள எதிர்கால திட்டங்களை
எப்படியும் இனிமேல் நிறைவேற்றிடுவார் என நம்பிய தால் தானே, தேவ
வார்த்தையால் தன்னை தானே தேற்றிக் கொள்கிறான்.
இறைவன்
ஒருவனை சிட்சிக்கிறாரென்றால் அதற்கு காரணம் அவனை நேசிக்கவில்லை
என்பதினாலல்ல, மாறாக மகனிடத்தில் இருக்கும் குறைகளை திருத்தும் பொருட்டாக
ஒரு தந்தையாகவே நம்மை அவர் மட்டாகவே தண்டிக்கிறார். ஒருவேளை எவ்வளவோ
தவறுகள் செய்தும், தேவனிடத்தில கண்டிப்பு பெறாதவர்கள் சிலாக்கியம்
பெற்றவர்களல்ல, அவர்களை முறையற்று பிறந்த, கேள்வி கேட்கும் தகப்பன்
ஸ்தானத்தில் யாரும் இல்லாத வேசியின் பிள்ளைகள் என வேதம் அறிவுறுத்துகிறது.
இது ஒரு சிட்சையெனில், நம்முடைய மாமிசத்தில் உள்ள அழுக்கான சுபாவத்தை பொன்னை புடமிடுமிறது போல தேவன் நம்மை உருக்கி சுத்தமான பொன்னாக மாற்றுவது இன்னொரு வகை சிட்சை.
எது எப்படியாயினும் நம்மை பரலோக இராஜ்ஜியத்திற்கு முன்குறித்த ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் குறித்திருக்கிறார். நமக்கு எல்லாமே குறிக்கப்பட்டுள்ளது. நாம் பேசும் மொழி, நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பெற்றோர் பிள்ளைகள், உறவினர். எல்லாமே முன்குறிக்கப்பட்டுள்ளது. திருமணம் கூட பரலோகத்தில் நிச்சயமாகிறது என்றும் நாம் சொல்ல கேட்கிறோம்.
வெறும்
சிட்சையினால் மாத்திரம் நாம் உபத்திரவப்படுகிறதில்லை. நம்முடைய உடல்,
குடும்பம், சூழ்நிலைகள் அமைந்தவிதத்தில் நமக்கு துன்பங்கள் வருவதுண்டு.
நாம் செய்த தவறினாலோ, நமக்குரியவர் செய்த தவறினாலோ நமக்கு சில புரியாத
தீமைகள் நடக்கிறது. இது தேவனுடைய நாமம் மகிமையடையும்படிக்கே நம் வாழ்வில்
நடக்கிறது.
அடியேன் சிறுவயதில் நல்ல நண்பன் பத்திரிக்கையில் படித்த உண்மை சம்பவத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
வெளிதேசத்தில் ஒரு சிறுமி இருந்தாள். அவளுக்கோ பாவம் கால் பாதங்கள் மிகவும் அகலமாக வித்தியாசமாக பார்ப்பதற்கு சற்று அகோரமாக இருந்தது. அவள் நண்பர்கள் மற்றவர்கள் அவளுடைய அகலமான பாதங்களை பார்த்து கேலியாக கிண்டல் செய்வார்கள். அவளுக்கும் தான் அதில் மிகவும் சங்கடம். அதோடு மற்றவர்கள் செய்யும் கேலி அவளை மிகவும் வேதனைப்படுத்தும். ஆண்டவர் தன் பாதங்களை ஏன் மற்றவர்களை போல சராசரியாக சரியான அளவில் படைத்திருக்க கூடாது என அவள் நொந்து தான் போயிருக்கக்கூடும். நாட்கள் கடந்தன. அவள் இப்போது ஒரு வாலிப பெண். இப்போதும் அவளுடைய வித்தியாசமான பாதங்களை மற்றவர்கள் கேலி செய்கிறார்கள். ஒரு நாள் வந்தது. அவள் தன்னை தேவனுடைய திருப்பணிக்கென்று ஒப்புக் கொடுத்தாள். மலைதேசத்து மக்களுக்கு அருட்பணி செய்ய ஒரு குழுவினரோடு ஒரு ஸ்தாபனத்தால் அனுப்பப்பட்டாள். மலைமீது ஏறித்தான் அங்குள்ள மக்களை சந்திக்க வேண்டுமென்பதால் ஒவ்வொரு நாளும் அவர்கள் மலை ஏறுவார்கள். எவருக்கும் மலையேறும் அனுபவம் இல்லாத படியால் அந்த குழுவினர் மலையேற சிரமப்படும் போது இந்த இளம்பெண் மாத்திரம் சர்வசாதாரணமாக மலையேறி முன்னேறி சென்றாள். மற்றவர்களுக்கு ஆச்சரியம், அவளுக்கும் தான். அந்த சமயத்தில் தான் அவளுக்கு புரிந்தது. எதிர்காலத்தில் மலைகளில் ஏறி நடந்து செய்யவிருக்கும் திருப்பணிக்காகவே அவளுடைய பாதங்கள் அகலமாக படைக்கப்பட்டிருந்ததை எண்ணி தேவனுக்கு நன்றி செலுத்தினாள்.
வெளிதேசத்தில் ஒரு சிறுமி இருந்தாள். அவளுக்கோ பாவம் கால் பாதங்கள் மிகவும் அகலமாக வித்தியாசமாக பார்ப்பதற்கு சற்று அகோரமாக இருந்தது. அவள் நண்பர்கள் மற்றவர்கள் அவளுடைய அகலமான பாதங்களை பார்த்து கேலியாக கிண்டல் செய்வார்கள். அவளுக்கும் தான் அதில் மிகவும் சங்கடம். அதோடு மற்றவர்கள் செய்யும் கேலி அவளை மிகவும் வேதனைப்படுத்தும். ஆண்டவர் தன் பாதங்களை ஏன் மற்றவர்களை போல சராசரியாக சரியான அளவில் படைத்திருக்க கூடாது என அவள் நொந்து தான் போயிருக்கக்கூடும். நாட்கள் கடந்தன. அவள் இப்போது ஒரு வாலிப பெண். இப்போதும் அவளுடைய வித்தியாசமான பாதங்களை மற்றவர்கள் கேலி செய்கிறார்கள். ஒரு நாள் வந்தது. அவள் தன்னை தேவனுடைய திருப்பணிக்கென்று ஒப்புக் கொடுத்தாள். மலைதேசத்து மக்களுக்கு அருட்பணி செய்ய ஒரு குழுவினரோடு ஒரு ஸ்தாபனத்தால் அனுப்பப்பட்டாள். மலைமீது ஏறித்தான் அங்குள்ள மக்களை சந்திக்க வேண்டுமென்பதால் ஒவ்வொரு நாளும் அவர்கள் மலை ஏறுவார்கள். எவருக்கும் மலையேறும் அனுபவம் இல்லாத படியால் அந்த குழுவினர் மலையேற சிரமப்படும் போது இந்த இளம்பெண் மாத்திரம் சர்வசாதாரணமாக மலையேறி முன்னேறி சென்றாள். மற்றவர்களுக்கு ஆச்சரியம், அவளுக்கும் தான். அந்த சமயத்தில் தான் அவளுக்கு புரிந்தது. எதிர்காலத்தில் மலைகளில் ஏறி நடந்து செய்யவிருக்கும் திருப்பணிக்காகவே அவளுடைய பாதங்கள் அகலமாக படைக்கப்பட்டிருந்ததை எண்ணி தேவனுக்கு நன்றி செலுத்தினாள்.
ஆம் எனக்கன்பானவர்களே! நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு கேலி கிண்டல் சிரிப்பாக இருக்கலாம். நமக்கு ஏன் இந்த பெலவீனம், குறைபாடு்? ஏன் எனக்கு பெற்றொரில்லை, ஏன் குழந்தையில்லை? ஏன் எனக்கு மற்றவர்கள் போல வசதியில்லை என்று நீங்கள் நொந்து போகவேண்டாம். உங்கள் வந்திட்ட வியாதியை பார்த்து இந்த உலகம் உங்கள் கதை முடிந்தது என்று சந்தோஷமடையலாம். கர்த்தர் அறியாமல் ஒரு தலை முடியாகிலும் கீழாக விழாது. நம்பிக்கையை மாத்திரம் இழக்காதிருங்கள். யோபை போலவே வியாதியின் கோரத்திலிருந்து மீட்டவர் உங்களுக்கும் விடுதலை கொடுத்து உங்களை கொண்டு உங்கள் சரீரத்தை கொண்டு அவர் குறித்த வேலையை நிறைவேற்றியே தீருவார்.
கர்த்தர் என்றைக்கும் ஆளுகை செய்கிறார். நம்முடைய எதிர்காலத்தை குறித்து கரிசனை உடையவராயிருக்கிறார். அவர் நமக்கு காரணமில்லாமல் எதையும் அனுமதிக்கிறதில்லை. அவர் நம்மை நேசித்தப்படியினால் தம் சாயலாகவே நம்மை படைத்திருக்கிறார்.
நம்மை படைத்தவர் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எப்படியாக இருக்கவேண்டுமென நாம் பிறக்கமுன்பாகவே எல்லாவற்றையும் குறித்திருக்கிறார்.
நம்மை படைத்த தேவன் அன்பாகவே இருக்கிறார். அவரை விசுவாசிக்காத மனிதர்களையே அவர் நேசிக்கும் போது அவரை நம்பி எல்லாவற்றிலேயும் தேவனை யே சார்ந்து வாழும் மனிதனை அவர் நேசிக்காமல் இருப்பது எப்படி?
அவர் நமக்கு நன்மையல்லாமல் தீமை செய்கிறதில்லை. அவர் உங்களுக்கு குறித்ததை எப்படியும் நிறைவேற்றுவார். பயம் வேண்டாம்.
ஆண்டவர் நம்மோடிருக்கிறார்.
2. இம்மைக்குரிய, மறுமைக்குரிய ஆசிர்வாதத்தால் நம்மை நிரப்புவார்.
3. அவர் ஆராய்ந்து அறிய முடியாத பெரிய காரியங்கள் செய்கிறார்...
4. எனக்கு குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்.
5. என் மீட்பர் உயிரோடிருக்கிறார்.
Matthew 19:26
Comments
Post a Comment