‘நான் (இயேசு) உங்களுடனே இருக்கிறேன்'



 ‘நான் (இயேசு) உங்களுடனே இருக்கிறேன்'தேவச்செய்தி போதகர் ஏனோக்கு சாலமன், ஓட்டப்பிடாரம்.
"நான் (இயேசு) உங்களுடனே இருக்கிறேன்" (மத்தேயு 28:20) என்ற நம் ஆண்டவர் எவ்வகையான உறவாக நம்மோடு இருக்க சித்தம் கொண்டிருக்கிறார் என்பதை இரத்தின சுருக்கமாக நாம் படிக்கலாம்,

1. சிநேகிதராக (Friend)
2. காப்பாற்றுகிறவராக (Saviour)
3. வழிகாட்டியாக (Guide)

1) சிநேகிதராக நம்மோடு அவர் பழகுகிறார்.
லூக்கா 12:4:  என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன் பயப்படாதிருங்கள்
யோவா 15:13    தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனை கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை
யோவா 15:15    நான் உங்களை சிநேகிதர் என்று என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.

2) மீட்பராக நம்மை காப்பாற்றுவார்
2 தீமோ 4:18  கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து தம்முடைய பரமராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்
2 பேதுரு 2:5  நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப் பேரைக் காப்பாற்றி
எபே 5:29  கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல

3) வழிகாட்டியாக நம்மோடு பயணிக்கிறார்.
சங்கீதம் 32:8   நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன்மேல் உன் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
நெகே 9:19  நீர் உம்முடைய மிகுந்த மன உருக்கத்தீன்படியே கைவிடவில்லை, அவர்களை வழிநடத்தும் பகலிலே மேகஸ்தம்பமும்....இரவிலே அக்கினிஸ்தம்பமும் அவர்களை விட்டு விலகவில்லை
எரேமி 10:23  கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது  நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன் (கர்த்தராய் ஆகும்)

இயேசு உங்களோடு இருக்கிறாரா? நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.

Comments