காதல் நேர்மையானதா?



இனிய வலை அன்பர்களே ...!

இயேசுவின் நாமத்தில் நல் வாழ்த்துக்கள் .
இந்த தளத்தின் வாயிலாக அநேகரை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
காதல் நேர்மையானதா?
எழுத்தாக்கம் உதயன் 
பண்டைய காலத்தில் காதல் என்பதற்கு களவு  என்று பொருள் உண்டு
" தமக்கு உறவு அல்லாத ஒரு பெண்ணை அவளது உறவினர் கொடுக்கக் கொள்ளாது, கேட்டுப் பெறாது பெண்ணின் விருப்பத்தோடு யாரும் அறியாமல் கூடி, பின்னும் கள்ளத்தனமாய் வாழ்தல் களவு என தமிழ் இலக்கியம் கூறுகிறது. "
பெற்றோர் நிச்சயிக்காத கணவன் மனைவி மரபுக்குட்படாத உட்படாத ஆண் பெண் உறவு களவு என்று தான் அழைக்கப் பட்டது. வருமானம் ஈட்டிய சம்பாதிக்கும் திறன் உள்ள ஒரு தகுதி படைத்த வாலிபன் பெற்றோரிடம் போய் முறையாய் பெண் கேட்பான்…  மரபுகளை சட்டங்களை மீறி பெற்றோருக்கும் கட்ட போகிறவனுக்கும் உரிமையான பெண்ணை குறுக்கு வழியில் அடைய நினைப்பவன் செய்யும் கள்ளத்தனத்தை காதல் என்றும் சொல்வர் களவு என்றும் சொல்வர்.
ஒரு இரட்சிக்கப்பட்ட இள வாலிபன் ஒருவன் இருந்தான். அவனிடம் விளையாட்டாய் உனக்கு யார் காதலி என்று சிநேகிதர் கேட்டால் கூட எனக்கு தான் இயேசுவோடு திருமணமாகிவிட்டதே என்பான், விளக்கத்தோடு கேட்போரிடம்.
ஓர் கணம் யோசித்து பாருங்கள். இன்றை செய்தித்தாளில் நாம் படிக்கும் நிதரிசனமான காரியங்கள் நமக்கு உணர்த்துவது தான் என்ன? கடற்கரையோரம் எல்லை மீறும் காதலர் செய்யும் லூட்டிகள். பைக்கில் காதலனும், காதலியும் கணவன் மனைவி கூட காட்டாத நெருக்கம்.... பொது இடம் என்றும் பாராமல் எந்த இடத்தை தான் விட்டு வைத்துள்ளனர் நம்ம காதலர்கள்...
பெற்றோருக்கு தெரியாமல் காதலர் சந்தித்து, அந்த சமயத்தில் நடந்திட்ட அசம்பாவிதங்களில் உயிர் நீத்த பெண்களின் பட்டியல் தான் எத்தனை நீளம்? மாலை சினிமா பார்த்து விட்டு தாமதமாய் வீடு திரும்பின சமயத்தில் தானே டில்லி நிர்பயா துயர சம்பவம் நடந்தது? காதலர் சற்று பொறுப்புடன் நடந்து கொண்டிருந்தால் எத்தனை பெண்கள் விபத்திற்கு தப்பியிருப்பார்கள்? பெற்றொருக்கு தெரியாமல் சந்தித்து அதனால் விபத்தோ வேறு ஏதாவது ஆபத்தோ நேர்ந்து காதலியோ, (காதலனோ) இறக்க நேரிட்டாலோ, வேறு ஏதாவது சோக முடிவு ஏற்பட்டாலோ அந்த காதலன் (காதலி) தானே முழு பொறுப்பு? முடிவில் தோல்வி தவிர்க்க முதலிலே சரியாய் முடிவெடுக்கலாமே. மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக, கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருக்க வேண்டிய ஒரு கிறிஸ்தவ பிள்ளைகளே இது போன்ற சாத்தானின் சோதனைகளுக்கு பலியாகிவிடுகின்றனரே.
எங்கு போனாலும் பெற்றோரிடம் தாம் தத்தம் காதலன், காதலியுடன் தான் இந்த இடத்தில், இந்த நேரத்தில், இவனோடு (இவளோடு) இருப்பேன் என்று சொல்லிவிட்டு போக எத்தனை காதலர்களுக்கு நேர்மை இருக்கிறது? என்று .சொல்லுங்கள். இந்த இன்டர்நெட் யுகத்திலும் நிச்சயிக்கப்பட்ட பெண்ணையே நேரம் காலம் இல்லாமல் பையனோடு செல்ல அனுமதிக்காத பெற்றோர்கள் இருக்கவே செய்கின்றனர்.
காதலிப்பவர் மனம் நோக இதை எல்லாம் எழுதவில்லை. காதல் நேர்மை அற்றது என்பது நாம் சொல்லவில்லை. திருமணத்திற்கு முன்பான, பெற்றோர் அனுமதியில்லாத காதலில் என்ன நேர்மை இருக்க முடியும்? என்பதே நமது கேள்வி. இன்னுமா இளம் கிறஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு புரியவில்லை?
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுகின்றன என்பதும் கிறிஸ்தவ வழிமுறை படி சரி தான் . தேவன் அசீர்வதித்துள்ள மணவாழ்க்கை இரண்டு வகைபடுத்தலாம்.
ஒன்று: அவருடைய சித்தத்திற்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்த கைசேர்ந்த தம்பதியினர். தம்முடைய, தத்தம் குடும்பத்தினர் விருப்பத்தின்படியே இணைந்த தம்பதியினர். தேவன் அனுமதியாமல், அவர் அறியாமல் ஒரு காரியமும் நடைபெறாது வகையில் இதை தேவனுடைய தீர்மானம் என்று சொல்லலாம்.
இரண்டு: அவருடைய சித்தத்திற்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்த கைசேர்ந்த தம்பதியினர். தேவனுடைய அநாதி தீர்மானம் என்று சொல்லலாம். இப்படி தங்களை தேவனுடைய பரிபூரண சித்தத்திற்கு ஒப்புகொடுப்பவர்கள் வாழ்வில் தான் தேவ மகிமை பூரணமாக விளங்கும்.
ண்மையில் காதலில் விழாமல் திருமணம் வரை காத்திருப்பது மிகவும் சவாலானது தான். சில பல வழிகளில் ஒரு கிறிஸ்தவ வாலிபர் காதல் இச்சைகளுக்கு விலகி ஓடலாம். வேதவசனங்களை எப்பொழுதும் தியானிக்கலாம் அல்லது தத்தம் தொழில் சார்ந்த விஷயங்களில் அறிவை வளர்த்து கொள்ள பயிற்சி எடுக்கலாம். ஜெபத்தில் அமர்ந்து தேவனோடு பேசும் அனுபவத்தை அதிகரிக்கலாம்.. சபையிலோ வெளியிலோ ஊழிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றால் அந்த காரியங்களில் பங்கு பெறலாம்.
If any young man / woman wants to be used by the Holy Spirit must be always prepared. - Pastor G Sundaram
பரிசுத்த ஆவியினால் உபயோகிக்கப்பட விரும்பும் எந்த வாலிபனும் எந்த நேரமும் தயாராக இருத்தல் அவசியம்
-
போதகர் G சுந்தரம்
 There won't any time to sin for a young man who hardly comes up to do more God's ministry due to lack of time. - Pastor Robert Simon
ஊழியம் மிகுதியாய் செய்திடவே நேரம் போதாத வாலிபனுக்கு பாவம் செய்யவும் நேரம் இருப்பதில்லை. - போதகர் இராபர்ட் சைமன்
வேகிறதை காட்டிலும் விவாகம் பண்ணுகிறது நல்லது.
ஒருவேளை வேதம் சொல்வது போல் ஏற்கனவே காதலித்து விட்டிருந்தால், ஆண்டவரிடம் அர்ப்பணித்து பெரியவர்களிடம் பேசி சீக்கிரம் திருமணம் செய்யும் வழியை கண்டுபிடியுங்கள்.
காதலில் தோல்வி அடைய நேரிட்டாலும் கொஞ்சமும் விசார பட வேண்டாம். வேறு ஒரு துணையை ஆண்டவர் நிச்சயம் காட்டுவார். ஒரு பெரிய எதிர்காலம் உங்களுக்காகவே ஆண்டவர் வைத்திருக்க இழப்பிற்காக காலம் முழுவதும் துக்கம் கொண்டாட வேண்டாம். கடந்தவை எல்லாம் ஒழிந்து போகட்டும். எல்லாம் புதிதாகட்டும்
நமக்கெல்லாம் ஏற்ற மணவாளன் மணவாட்டியை ஆண்டவர் நிச்சயித்து இருக்கிறார். ஏற்ற வேளையில் அவர் அதை வெளிபடுத்துவார். உங்கள் துணையை கண்டுபிடிக்கும் பொறுப்பை, ஆண்டவரிடம் விட்டு விடுங்கள். அவர் தருவது எதிலும் தீமை இருப்பதில்லை.
இந்த பகுதி இன்னும் முடியவில்லை, பெற்றோர், பிள்ளைகள், நண்பர்கள், சகோதரர்கள், கணவன் மனைவி போன்ற எல்லா உறவுகளை விட சக்தி வாய்ந்தது, இந்த மணவாளன் மணவாட்டி உறவு. திருமணமாகாத தலைவன் தலைவி நேசத்தை எல்லாம் காதல் என்று சொல்லிவிட முடியாது. அதுப்போலத்தான் மணவாட்டியை மனைவி என்று சொல்லிவிட முடியாது. கணவன் மனைவி உறவு வேறு. மணவாளன் மணவாட்டி உறவு வேறு. இந்த உறவு வரபோகும் நிச்சயிக்கப்பட்ட மணவாளன் கணவனாக போகும் நாளை எண்ணி காத்திருப்ப்வளே மணவாட்டி .நாம் அனைவரும் ஆட்டுகுட்டியானவரின் கிறிஸ்துவின் மணவாட்டி தான்.மணாட்டி சபைக்கும் மணவாளன் ஆட்டுகுட்டியானவருக்கும் பரலோகத்தில் திருமணம் என்பதும் புதிய ஏற்பாட்டின் ஆழமான உபதேசம்.
மணவாளன் மணவாட்டிக்குள் இருப்பதற்கு பெயர் என்ன களவா? இல்லை. ஆனால் இங்கு சொல்லப்பட்ட மணவாளன் மணவாட்டி நேசம் முற்றிலும் நேர்மையானது. எல்லா விதிகளுக்கும் உட்பட்டது.
நேசம் அக்கினி ஜூவாலையிலும் கொடியது. தண்ணீரும் வெள்ளங்களும் அதை தணிக்க மாட்டாது. இங்கு சொல்லப்பட்ட அன்பு என்பது மணவாளன் மணவாட்டி இடையே உள்ளது. மணவாளன் இயேசுவிற்கும் மணவாட்டி சபையாகிய நமக்கும் உள்ள உறவை குறித்து வரும்வாரத்தில் கவனிப்போம்.
காதல் நேர்மையானதாகவே இருக்கட்டும் திருமணமான பின்னே.

Comments