CharismaEministry: Promise of the year 2016
தேவன் செய்ய நினைத்தது தடைபடாது - பகுதி 2
நம் மீட்பர் இன்றும் உயிரோடிருக்கிறார்.
அவர் நம் இருளை வெட்டவெளிச்சமாக்குவார்.

உடைமைகள் எல்லாம் இழந்து, நேசித்தவரெல்லாம் மாண்டு போய்விட்ட
துர்ப்பாக்கிய சூழ்நிலை, தன் உடம்பெல்லாம் பார்ப்பவர் இளக்காரமாக
பரியாசிக்கும் பருக்கள் வந்த மனிதன் யோபுவிற்கு மனதிலும் வலி. உடலிலும்
வலி. நமக்கும் தான் இதுபோன்ற விவரிக்க இயலா . தாங்க முடியாத வலிகள்
வரும்போது... அந்த வலி என்றைக்கு தான் முடியும் ஆன்டவரே என்று நமக்கு
நீண்ட எதிர்ப்பார்ப்பு நமக்குள் வருவது இயற்கை.
சிப்பிக்கும் அதுபோன்று தான் வலி உருவாகும் நேரம் வருமாம். மிகுந்த வலி வேதனை உச்சக் கட்டமடையும் நேரம், அந்த வலியே சிப்பிக்குள் ஒரு திரவமாய் உருவாகிடும். அந்த திரவம் தான் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படும் முத்துவாக உருமாறுகிறது. சிப்பிக்குள் புறப்பட்ட வலிகளே முத்துவாக பிறக்கிறது. ஒருவேளை அன்பர்களே, எந்த வேதனை
வலிகளில்லாமல் வாழும் பிறரை பார்த்து நாம் நம்மை ஒப்பிட்டு பார்த்து ஏங்கினால் நமக்கு வரும் வலிகள் யாவும் நமக்கு மாத்திரமே ஒப்பற்ற உயர்வை நமக்கு தர போகும் என்று உணர்ந்திடுவோமா அன்பர்களே?
பண்டைய காலத்தில் எதோ ஒரு காரணத்தினால் கடன்பட்டு அதை திருப்பி கொடுக்க இயலாத எல்லாம் இழந்த ஒருவரை சந்தியில் அடிமையாக்கி ஒரு கடைசி வாய்ப்பாக அவருக்கு உரிய உறவினரோ நண்பரோ அவருக்குரிய பிணையத்தோகை கொடுத்தால் அவருக்கு விடுதலைக் கொடுப்பார்கள். இல்லாவிடில் அவர் ஜென்ம அடிமையாகி போவார்.
இந்த எதிர்பார்ப்பில் தானோ "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்" (-யோபு 19:25) . என்று சொல்லியிருப்பான். அந்த பிணையத்தோகை கொடுப்பவரைத் தான் இங்கு மீட்பர் என யோபு குறிப்பிடுகிறார். தன்னை மீட்பவர் எந்த உறவுமில்லை, நண்பனுமில்லை என்று புரிந்துகொண்டு இறைவனையே யோபு தன் மீட்பராக நம்புகிறார். அவர் தன்னை நியாயத்தீர்ப்பு நாளில் வருவதை என் கண்கள் காணும் என தீர்க்கதரிசனம் உரைக்கிறான்.
தேவனை நெருங்கி ஜீவிப்பவர்களுக்கு தான் இந்த உலகில் உபத்திரவம் அதிகம் என்று அநேகர் சொல்லுவார்கள். வேதம் கூட "நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது".(சங்கீதம் 34:19,22) என்று நம்மை திடப்படுத்துகிறது. இந்த பதிவை வாசிக்கிற கிறிஸ்துவில் பிரியமானவர்களே, வியாதியின் அகோரத்தால் அவதிப்படுகிறீர்களா? எல்லாம் சுமூகமாக செல்லும் போது உங்களை பார்த்து ஆச்சரியப்பட்டவர்கள் இன்று உங்கள் வாதை கொடியதாகிவிட்டதால் அதையே உங்கள் மேல் விழுந்த சாபம் எனத் தூற்றுகிறார்களா? காரணமில்லாமல் எல்லாராலும் பகைக்கப்படுகிறீர்களா?
கவலை வேண்டாம் சர்வ வல்ல தேவன் நம் மீட்பர் இன்றும் உயிரோடிருக்கிறார். அவர் அனுமதியின்றி எந்த காரியமும் நடக்கிறதில்லை. மனிதர்கள் நம்மை புரிந்துகொள்ளமுடியாது தான். கர்த்தர் நம்மை முழுவதும் அறிந்து புரிந்து வைத்திருக்கிறார். அவர் நம்மை எல்லா இக்கட்டிலிருந்தும் உங்களை விடுவிப்பார். உங்கள் நீதியை பட்டப்பகல் போல ஒருநாள் இந்த உலகத்திற்கு வெளிப்படுத்துவார். பொறுமையாயிருங்கள். கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் செய்ய நினைத்தது தடைபடாது.
-வாக்குத்தத்தம் தொடரும்.

Comments
Post a Comment