சுதந்திரப் பறவை...!

சுதந்திரம்!
உலகின் எந்த ஒரு நாட்டிலும், எந்த ஒரு ஆளுநரும் தான் ஆளும் எல்லா பிரிவு மக்களுக்கும் சுதந்திரத்தை முழுவதுமாக கொட்டுகிறதியில்லை.
நாம் வணங்கும் ஜிவனுள்ள தேவன் மனிதனை படைத்தப் போது... அவனுக்கு முழு சுதந்திரம் கொடுத்தமுமின்றி அதை விட பெரிதான பாக்கியம் சுயாதீனம் (freewill) என்கிற நல்லதோ கெட்டதோ எதையும் விருப்பச்செயல் உரிமையும் அளித்திருக்கிறார். இதை கொடுத்துவிட்டு தான்,  தன்னுடைய விருப்பத்தை செய்யும்படி தன் படைப்பான மனிதனை செய்ய சொல்லுகிறார்.

ஏதேன் தோட்டத்தில், ஆண்டவரின் படைப்பான நம்முடைய முதல் ஆதி தகப்பன் ஆதாம் தன் மனைவியுடன் சேர்ந்து தேவன் அளித்த இந்த உரிமையை அசட்டை பண்ணி  மீறுகிறான்.

மனிதன் அனுபவிக்க வேண்டிய நல்ல ஜீவன் கனி தரும் மரத்தையும் அவன் முன்னே வைக்கிறார். அதை மட்டுமே அவன் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால் அங்கு சுதந்திரம் உண்டு சுயாதீனம் இருக்காதே, ஆகவே தான் இன்னுமொரு தெரிந்துக்கொள்ளும் உரிமையையும் கொடுக்கிறார். அங்கே நன்மை தீமையை அறிந்து கொள்ளும் கனியை தரும் மரத்தையும் அங்கே வைக்கிறார். அதை சாப்பிட்டால் மனிதன் தேவ பிரசன்னத்திலிருந்து விலகி விடுவதுமின்றி அவன் ஆத்மா தேவ இரட்சிப்பில்லாமல் செத்துப்போகும் என்று எச்சரிக்கிறார்.

ஆதாமோ தேவன் அளித்த சுயாதீனத்தை மீறி தேவ கட்டளைக்கு கீழ்ப்படியாமல் அவனே தன் ஆத்தும இரட்சிப்பிற்கு கெடு விளைவித்து கொள்கிறான். கிட்டத்தட்ட 6000 வருடங்களுக்கு முன் இப்படித்தான் மனுக்குலத்திற்கு சாபம் வந்தது. இன்றைக்கும் ஆதி தகப்பன் ஆதாம் செய்த அந்த முதலாம் பாவத்தினால் வந்திட்ட சாபத்தை 2000 வருடங்களுக்கு முன் தேவன் மனு அவதாரமாக பிறந்து தன்னையே ஜீவப்பலியாக  அர்ப்பணித்து தேவனை நம்பி பின்பற்றுவோற்கு ஆதாம் இழந்திட்ட அந்த ஆத்தும மீட்சியை மீண்டும் தருகிறார்.  விசுவாசிக்காத மற்றவர்களும் மனந்திரும்பி தேவ மீட்பை பெறும்படி தேவன் கிருபையின் காலத்தை கொஞ்சம் நீட்டித்து இருக்கிறார். ஆனாலும் கடைசி காலம் இதுவே.
இயேசுவை தேவனாக நம்புகிற ஜனமே, இன்றும் நம்முன்னே ஜீவன் தரும் கனியும், நன்மை தீமை அறியத்தக்க கனியும் இருக்கவே இருக்கிறது. ஆதாமுக்கு கொடுக்கப்பட்ட அதே சுயாதீனம் நமக்கும் வஞ்சனையில்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது. தேவப்பிள்ளைக்கு தேவையானது என்னவோ அதை மட்டும் தெரிந்துகொள்ளும் சுதந்திரமும் நம்முன்னே இருக்கிறது. நம் சுதந்திரத்தை துஷ் பிரயோகிக்க நமக்கு உரிமையில்லை. ஜீவ வழி எதுவோ அதை நாடுவோம். அழிவைத் தரும் உலகத்தார் தினம் தினம் நாடி தேடும் இந்த சிற்றின்பங்கள் தேவ பிள்ளைக்கு எதற்கு? நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரத்தை முழுவதும் அனுபவிப்போமாக.

Comments