நாடகமும் ஊழியம் தான்...

நாடகமும் ஊழியம் தான்...

நண்பர்களே, ஒரு பாடலை இயற்றுவதையும், ஒரு புத்தகம் எழுதுவதையும் கர்த்தருடைய ஊழியமாக கிறிஸ்தவர்கள் கருதுவதுப்போல, நாடகம் அமைப்பதையும் ஊழியமாக கருதிட வேண்டும் என்பது என் நீண்ட நாள் எண்ணம். ஒரு மனிதர் தேவ சமூகத்தில் தியானித்து பாடல் இயற்றும் போது அதை தேவனுடைய ஊழியமாக எண்ணும் அநேக தேவப்பிள்ளைகள் ஒரு கிறிஸ்தவ நாடகத்தினை எதோ விளையாட்டைப் போல ஜாலியாக  எடுத்து கொள்ள பிரியப்படுகின்றனர்.

நீங்கள் எதை செய்தாலும் அதை கர்த்தருக்கென்று செய்யுங்கள் என்ற வேத வசனத்தின் படி தேவ வார்த்தைகளை அடிப்படையாக கொண்ட எந்தவொரு பிரயாசமும் ஊழியம் தானே... அந்த வகையில் நாடகமும் ஊழியம் தான்.

கடந்த காலங்களில் கிறிஸ்டியன் மீடியா சென்டர் என்னும் லூத்தரன் ஊழியம் நாடகங்களை மிக நேர்த்தியாக தொழில் ரீதியாக வெற்றிகரமாக அரங்கேற்றி வந்துள்ளனர். இன்றைக்கு இந்திய சினிமாவின் பிரசித்திபெற்ற உச்ச நடிகர்களில் ஒருவர் இந்த கிறிஸ்தவ நாடகங்களில் தன் இளம் பிராயத்தில் நடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.எத்தனையோ மக்கள் இந்த நாடகங்களை பார்த்து இறைவன் இயேசுபிரானின் மகத்துவத்தை அறிந்து கொண்டுள்ளனர். 

எல்லா விடுமுறை வேதாகம  பள்ளிகளிலும் இறுதி கலை நிகழ்ச்சிகளில் நாடகம் போடுவது வழக்கமான ஒன்று. எல்லா ஓய்வுநாள் பள்ளிகளிலும் ஆண்டு விழாவில் பல நாட்கள் பயிற்சி எடுத்து நாடகம் போடுவது சிறுப்பிள்ளைகளை மட்டுமல்லாது பார்க்கும் பெற்றோர்களையும் பரவசப்படுத்துவது நிச்சயம். அநேக சபைகள், சுவிசேஷ நிறுவனங்கள் தங்கள் சிறப்பு விழாக்களில் எப்பாடுப்பட்டேனும் ஒரு நாடகமாவது அரங்கேற்றுவது இந்த கதையை நடித்து காட்டினாலாவது மக்கள் மனதில் ஆண்டவர் வார்த்தை விதைக்க வேண்டுமென்பதே...

நான், என் போன்ற வார்த்தைகள் பயன்படுத்துவது அவசியம் என்று கருதுவதினால் தானே தவிர, பெருமையோ, தம்பட்டமோ இல்லை... புரிந்து கொண்டால் தொடர்ந்து படியுங்கள்.

தொடரும் நாட்களில் நாடகங்களை பற்றிய நான் அறிந்த ஒரு சில தகவல்களை கொஞ்சமே கொஞ்சம் அனுபவத்தோடு இந்தப் பகுதியில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

Comments