எதிர்பார்ப்பில்லா எஸ்தர்

 

எஸ்தர்

Posted bycharismaPosted inUncategorizedEditஎஸ்தர்

ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்னவேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.
Then said the king unto her, What wilt thou, queen Esther? and what is thy request? it shall be even given thee to the half of the kingdom. Esther 5 3
எஸ்தர் தனக்கு செய்ததை மறக்காத இராஜா.. அந்நிய மண்ணில் அரசனுக்கு பட்டத்து இராணி போட்டியின் இறுதி சுற்றுக்கு வந்து விட்டாள்… இனி அவள் தன்னையே அர்ப்பணித்து அன்றைய பொழுதை இராஜாவினிடத்தில் கழித்திட வேண்டும்… ஒருவேளை இராஜாவிற்கு பிரியமானால்… அவள் பட்டத்து இராணி… வாய்ப்பு நூற்றில் ஒரு சதவீதம் கூட இல்லை… இல்லாவிட்டால்  அவள் கேட்கும் எந்த ஒரு பரிசும் கொடுக்கப்படும்… இதுவே  இராணியாக தேர்வாகாதவர்களுக்கு கொடுக்கப்படவுள்ள உத்தரவாதமான பரிசு…  ஆனாலும் எஸ்தர் தேவ ஆலோசனைக்கு கீழ்ப்படிந்தாள்..

தனக்கான சுயமான விருப்பு வெறுப்பு எதுவும் இல்லாமல் ஒரு கோதுமை மணிபோல தன்னை அரப்பணித்தாள். மற்ற போட்டி யாளர்களான அழகுப்பெண்களிடம் இருந்து இவள் முற்றிலும் வித்தியாசமானவளாக இராஜாவிற்கு தோன்றினால்…
அழகி வஸ்தியின் அதிகார தோரணையை பார்த்திட்ட இராஜாவிற்கு எஸ்தரின் ஒழுக்கமும், அன்பும், தாழ்மையான சேவையும்… வெகுவாக கவர்ந்திருக்க கூடும்… நான் நினைக்கிறேன் எஸ்தர் தனக்கான பரிசு எதையும்  வேண்டியிருக்க மாட்டாள். எதிர்பார்ப்பில்லா அன்பை முதன் முறையாக இராஜா எஸ்தரிடம் பார்த்திருப்பான்.
எல்லாவற்றுக்கும் மேலே தேவ சித்தம் நிறைவேற அவளை இராஜா இராணியாக தேர்வு செய்தான்…இருந்தும் தான் அழைப்பியாமல் வந்திட்ட மரண தண்டனையிலிருந்து எஸ்தரை காப்பாற்றும் பொருட்டு தன் செங்கோலை உடனே நீட்டினான். அவன் தன் மனைவியை வெகுவாக நேசித்தான்.
அதனாலேயே அவளை பார்த்து என் இராஜ்யத்தில் பாதி கேட்டாலும் தருவேன்… என்று அடிக்கடியாக சொல்வதை பார்க்கிறோம்… நேச வைராக்கியம் மரணத்தை காட்டிலும் கொடியது…
எஸ்தரின் அர்ப்பணிப்பு இராஜாவால், தேசத்து மக்களால், மறக்கப்படவில்லை.  தேவன் அவள் பேரை மிகவும் உயர்த்தியுள்ளார்.

அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது. நீதிமொழிகள் 31:31
Give her of the fruit of her hands; and let her own works praise her in the gates.

தேவ சித்தம் செய்யவும், தேவனுக்கு செய்யவும், தன்னை வெறுத்து ஆத்தும பாரத்தோடு ஊழியம் தன் பிள்ளைகளை தேவன் மறக்காமல், அவர்கள் நினைப்பதற்கும்ம், வேண்டுவகருக்கும் அதிகம் கிரியை செய்திடுவார்…
நம்பி வாங்க உங்க அப்பாவை… அவர் உங்களை மறக்கமாட்டார்..

Comments